விடுதலைக்கு முன் சினிமா மாணவன் இப்போ மார்க்சிஸ்ட் மாணவன் - மதுரையில் நடந்த விழாவில் வெற்றி மாறன் ஓபன் டாக்

By subhashini · 5/4/2025

சமீபத்தில் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று இருந்தது. இதில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டிருந்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய வெற்றிமாறன், இப்போது சினிமாவில் உள்ள தேடல், சினிமாவின் மாணவனாக இருப்பதற்கு சமூகத்தோடு எனக்கு இருக்கிற தேடலும், தொடர்பும், சமூகத்தின் மீதான கோபம் இயக்குனர் பாலு மகேந்திரா உடன் இருந்ததால் தான் எனக்கும் இருக்கிறது. சினிமாவில் எனக்கு ஒரு அடையாளம் இருக்கிறது என்றால் அதற்கு பாலு மகேந்திரா தான் காரணம்.

https://www.youtube.com/watch?v=m4ENmdkw7qY

ஆடுகளம் படத்தை எடுத்ததற்கு காரணம் மதுரை மக்கள் தான். ரொம்ப அன்பு செலுத்துவார்கள். சாப்பாடுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால் தான் நான் இரண்டரை ஆண்டுகள் மதுரையிலேயே இருந்து படத்தை எடுத்தேன். மேலும், ஒரு நாவலை படமாக எடுப்பதற்கு முதலில் செய்ய வேண்டியது நாவல் ஈர்க்க வேண்டும். அந்த நாவலின் அடிப்படை சிந்தனை உன்னை முன் நகர்த்தினால் அந்த நாவல் சினிமா எடுக்க தகுதியானது என்று பாலு மகேந்திரா சார் சொன்னார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விழா:

அவர் வேலை செய்வதை பார்த்தது தான் எனக்கு அனுபவம். வெட்கை நாவல் அசுரன் படமாக வந்த போது சிலருக்கு பிடிக்கவே இல்லை. பூமணிக்கே இந்த படத்தின் மீது விமர்சனங்கள் இருந்தது. மேலும், விடுதலை படம் என்பது எனக்கு 45 ஆண்டு வாழ்க்கையை விட நிறைய கற்றுக்கொடுத்தது. நிறைய மனிதர்கள், தலைவர்களை பற்றி எல்லாம் தெரிந்து கொண்டேன். விடுதலைக்கு முன்பு மேடையை அலங்கரிக்கும் கவர்ச்சி பேச்சுகளை பேசும் தலைவர்களை எல்லாம் தான் என் கண்ணுக்கு தெரிந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=9K-Ci1EQq4s

விடுதலை படம் பற்றி சொன்னது:

மக்களோடு மக்களாக விடுதலையை வென்றெடுத்த தலைவர்களைப் பற்றி அப்போது எனக்கு தெரியவில்லை. விடுதலை படத்திற்கு பின் நான்கு ஆண்டுகள் நிறைய அனுபவம் கிடைத்தது. விடுதலை முன்பு சினிமா மாணவனாக இருந்த நான் இப்போது மார்க்சிஸ்ட் மாணவனாகவும் மாறி இருக்கிறேன். எந்த ஒரு சமூகம் அமைப்பும் மார்க்சியம் இல்லை என்றால் அது மக்களுக்கு எதிராக நின்று விடும் என்பதுதான் என்னுடைய புரிதல். இந்த மாநாட்டில் ஒரு நிகழ்வில் நான் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார் .

வெற்றிமாறன் திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. பெரும்பாலும் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.
அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் விடுதலை. இந்த படத்தில் கதாநாயகனாக சூரி, விஜய் சேதுபதி போராளியாக முக்கிய படத்தில் நடித்திருந்தார்கள். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது.

வெற்றிமாறன் படங்கள்:

இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்த படத்தை குறித்து பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலரும் பாராட்டி இருந்தார்கள். விடுதலை படத்தின் முதல் பாகம் வெற்றி அடைந்ததை அடுத்து கடந்த ஆண்டு இரண்டாம் பாகம் வெளியாகி இருந்தது.
இந்த இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து தற்போது வெற்றிமாறன் அவர்கள் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்குகிறார். சி.சு செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை தழுவி இந்த படம் எடுக்கிறது. இதைத் தொடர்ந்து இவர் இன்னும் சில நடிகர்களின் படங்களில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full