நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சூழலில் தான் இருந்தேன் - இயக்குனர் வெற்றி மாறன் ஓபன் டாக்

By subhashini · 14/5/2025

சினிமா பற்றி இயக்குனர் வெற்றிமாறன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அதிலும் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் விடுதலை.

இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி போராளியாக முக்கிய படத்தில் நடித்திருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார்.

வெற்றிமாறன் திரைப்பயணம்:

இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்த படத்தை குறித்து பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலரும் பாராட்டி இருந்தார்கள். விடுதலை படத்தின் முதல் பாகம் வெற்றி அடைந்ததை அடுத்து இரண்டாம் பாகம் வெளியாகி இருந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், சேத்தன், கௌதம் மேனன் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

வெற்றிமாறன் பேட்டி:

இதை அடுத்து தற்போது வெற்றிமாறன் அவர்கள் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார். சி.சு செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை தழுவி இந்த படம் எடுக்கிறது. இந்த படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. தற்போது இந்த படத்தினுடைய முதல் கட்ட பணிகளில் வெற்றிமாறன் ஈடுபட்டு வருகிறார். ஜூலை மாதத்தில் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் வெற்றிமாறன், ஒரு இயக்குனராக உங்கள் படத்தை உருவாக்க எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை வேறு யாரையும் தீர்மானிக்க அனுமதிக்க கூடாது என்பது தான் நான் கற்ற மிகப்பெரிய பாடம்.

https://www.youtube.com/watch?v=yZJX2qPYgNA

கற்றுக்கொண்ட பாடம்:

நான் எனக்கான நேரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த விடுதலை படத்தில் மூன்று, நான்கு மாதங்கள் இன்னும் வேலை செய்ய விரும்பினேன். வாடிவாசல் படத்திற்கு ஏற்படும் அதிக எதிர்பார்ப்புகளுக்கு பதிலளிக்கும் முயற்சியிலும் நான் சிக்க விரும்பவில்லை. நான் என்னுடைய 100% உழைப்பை என்னுடைய பணியில் செல்வது மட்டும்தான் கவனம் செலுத்துகிறேன். என் படங்கள் மீது உருவாகும் எதிர்பார்ப்புகளுக்கு நான் பொறுப்பு கிடையாது. மேலும், ஒரு இளம் பெண் சமீபத்தில் என்னுடைய அலுவலகத்திற்கு வந்து உதவி இயக்குனராக சேர வாய்ப்பு கேட்டார். அவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். ஆனால், சென்னையில் தன்னுடைய நண்பர்களுடன் வசித்து வருவதாக சொன்னார்.

https://www.youtube.com/watch?v=cKvF8eJ34IU

பெண்கள் இயக்குனர்கள் பற்றி சொன்னது:

சுமார் இரண்டு சகாப்தங்களுக்கு முன்பு நானும் இதே போன்று தான் ஒரு சூழலில் இருந்தேன். தற்போது பெண்கள் தனித்துவமான யோசனை உடன் முன்னேறி வருவதை பார்க்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பெரும்பாலும் நான் வன்முறையை காட்டிலும் காதல் படங்களை தான் அதிகமாக தேர்ந்தெடுப்பேன். நான் காதல் கதைகளை படமாக்க உருவாக்கலாம் என்று முடிவெடுத்தாலும் உங்களுடைய எதிர்பார்ப்பு வேறு விதமாக இருக்கிறது. அதோடு நிறைய பேர் இளம் இயக்குனர்கள் இருக்கிறார்கள். சிலர் இன்னும் நல்ல படங்களை எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். அந்த லிஸ்டில் வினோத் ராஜ் மற்றும் பேட் கேர்ள் இயக்குனர் வர்ஷா இருக்கிறார்கள் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full