25 YEARS வானத்தைப்போல - படத்தோட முதல் ஒரு மணி நேரத்துல நான் அந்த தப்ப பண்ணிட்டேன் - விக்ரமன் சொன்னது

By subhashini · 14/1/2025

வானத்தைப் போல படத்தின் அனுபவம் பற்றி இயக்குனர் விக்ரமன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் திகழ்பவர் விக்ரமன். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் விக்ரமன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் தான் வானத்தைப்போல.

விஜயகாந்த் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த குடும்ப திரைப்படம் தான் வானத்தைப்போல. இந்த படத்தில் மீனா, பிரபுதேவா, லிவிங்ஸ்டன், கௌசல்யா, அஞ்சு அரவிந்த், செந்தில் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தந்திருந்தது. மேலும், இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் இயக்குனர் விக்ரமன், ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.

இயக்குனர் விக்ரமன் பேட்டி:

இதை விட ஒரு பெருமையான விஷயம் என்னனா, இந்த மில்லினியம் ஆண்டில் வெளியான முதல் தமிழ் திரைப்படம் வானத்தைப்போல படம் தான். அதற்காகவே பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான படங்களுக்கு முன்பே இந்த படத்தை நான் வெளியிட்டேன். சரியாக டிசம்பர் 31ஆம் தேதி வரைக்கும் சாலக்குடியில் மைனாவே மைனாவே பாடல் ஷூட்டிங் செய்துவிட்டு அன்று மாலையே எடிட்டிங் முடித்துவிட்டு 2000 ஆம் ஆண்டின் உடைய புத்தாண்டை எடிட்டர் ரூமில் தான் நாங்கள் கொண்டாடினோம்.
நான் நினைத்தபடி மில்லினியம் ஆண்டில் முதல் தமிழ்த் திரைப்படமாக வானத்தைப்போல ரிலீஸ் செய்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

படம் அனுபவம்:

அதோடு தமிழில் மட்டும் இல்லாமல் தென்னிந்தியாவிலேயே முதல் படம் என்றால் அது வானத்தைப்போல தான். மேலும், விஜய்காந்த் சார் நடிக்கிறார் என்றவுடன் அவருக்காக ஒரு டைட்டில் வேண்டும் என்பதற்காகத்தான் வானத்தைப்போல என்று டைட்டில் வைத்தேன். அந்த படத்திற்கு அது பொருத்தமாகவும் இருந்தது. வானத்தைப்போல படத்தில் அண்ணன் தம்பி காட்சியில் நான் முதன் முதலில் யோசித்த சீனே வேற. அதுவரைக்கும் தமிழ் சினிமாவில் அண்ணன் கஷ்டப்பட்டு தம்பியை பட்டணத்தில் படிக்க வைப்பார். ஆனால், அவர் காலேஜில் வசதியாக சுற்றி கொண்டிருப்பார்.

https://www.youtube.com/watch?v=cR_sUHXDVHw

படத்தின் கதை:

இப்படி பல படத்தில் வந்தது. இதனை மாற்ற வேண்டும் என்று தான் நான் முதலில் யோசித்தேன். பாசிட்டிவான ஒரு அண்ணன் தம்பி இருந்தால் எப்படி இருக்கும் என்று தான் நான் இதை வைத்தேன். அதேபோல் படத்தில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு விஜயகாந்த் உடைய ரோல் அண்டர் பிளே கேரக்டராக தான் இருக்கும். அந்த ஒரு மணி நேரத்தில் நான் வேற மாதிரி கொண்டு சென்றிருக்கலாம். மாஸாக கொஞ்சம் ஹீரோயிசமாக காண்பித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடலை நா.முத்துக்குமார்,பா. விஜய், ரவிசங்கர் மூன்று பேருமே சேர்ந்து எழுதியது. இந்த பாடினுடைய கிரிடிட் மூன்று பேருக்கும் தான் கொடுத்துவிட்டேன்.

படத்தின் பாடல் பற்றி சொன்னது:

எங்கள் வீட்டில் எல்லா நாளும் இந்த பாடலை நா முத்துக்குமார் தான் எழுதினார். அதற்கு பிறகு தான் சில வழிகளை பா.விஜய் மாற்றினார். கொஞ்சம் வரிகள் என்னுடைய அசிஸ்டன்ட் ரவிசங்கர் எழுதினார். ஓபனிங் 2 லைன் நா.முத்துக்குமார் எழுதியது. மீதி 50 % முதல் 60% விஜய் எழுதினார். அதிர்ந் பின் 25% ரவி எழுதினார். மேலும், இந்த பாடல் கிரிக்கெட் வீரர் ஜடோஜாவின் ஃபேவரட். அது என்ன படம்? என்ன சாங்? என்று கூட அவருக்கு தெரியாது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு தீம் பாடலாக எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடல் மாறி இருப்பது நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது என்று பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full