நான் நிம்மதியாக சாப்பிட காரணமே அவர் போட்ட பிச்சை தான் - கண் கலங்கும் இயக்குனர் விக்ரமன்
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஜீவா. இவருடைய தந்தை
தான் பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி. இவர் சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற பெயரில் பல வெற்றி படங்களை தயாரித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளிலும் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=yKpoymWNB4I
இவர் கடைசியாக சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த மாரிசன் என்ற படத்தை தான் கடைசியாக தயாரித்திருந்தார். இந்த படத்தில் வடிவேல், பகத் பாஸில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் கடந்த ஆண்டு வெளியாகியிருந்தது. இது தான் இவருடைய 99 ஆவது படம். இப்படி 40 ஆண்டுகளுக்கு மேல் இவர் சினிமா துறையில் பயணித்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ஜீவாவின் தந்தையும், தயாரிப்பாளருமான ஆர்பி சௌத்திரி அவர்கள் இறந்திருக்கும் செய்தி தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆர்.பி சௌத்ரி இறப்பு:
ஆர்.பி சௌத்ரி அவர்கள் தன்னுடைய சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலத்துக்கு தன்னுடைய உறவினர் ஒருவரின் திருமணத்த விழாவிற்கு கலந்து கொள்ள தனது மருமகனுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஜூன்டா கிராமத்திற்கு அருகே வந்தபோது திடீரென்று சாலையில் மாடுகள் குறுக்கே வந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ரசுவரில் மோதியது. இந்த மோதலில் ஆர் பி சவுத்ரி அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
ஆர்.பி சௌத்ரி இரங்கல்:
கார் ஓட்டுநர் அதிக படுகாயம் அடைந்திருக்கிறார். தன் தந்தையின் இழப்பை அறிந்த ஜீவா ரொம்பவே மனமடைந்து இருக்கிறார். இவருடைய இறுதி சடங்குகள் சென்னையில் நடக்கிறது. சவுத்ரி இழப்பை அறிந்து சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இயக்குனர் விக்ரமன் கண்கலங்கியவாறு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், 40 வருடத்திற்கு முன்னாடி நம்மளும் ஒரு இயக்குனர் என்று கனவுகளோடு சென்னைக்கு வந்து ரொம்பவே கஷ்டப்பட்டேன்.
https://www.youtube.com/watch?v=9_M17PZwNlo
இரங்கல் தெரிவித்த விக்ரமன்:
பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏறி இறங்கி சாப்பாட்டுக்கே கஷ்டமெல்லாம் பட்டு போராடிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் சௌத்ரி சார் எனக்கு வாய்ப்பு தந்தார். சவுத்ரி சாரிடம் போய் கதை சொன்னேன். அவர் கதையை கேட்டதுமே ஓகே சொல்லிவிட்டார். அப்படி ஆரம்பிக்கப்பட்ட படம் தான் புது வசந்தம். இன்னைக்கு என்னுடைய வீட்டினுடைய பெயரும் புதுவசந்தம் தான். இன்று நான் நிம்மதியாக சாப்பிட்டு கொண்டிருப்பதற்கு காரணமே அவர் போட்ட பிச்சைதான். அவர் இன்னைக்கு இல்லை என்பது எனக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது என்று கண் கலங்கியவாறு பேசியிருக்கிறார்