ஏ.ஆர்.ரகுமான் சொன்னத நான் கேட்கல , படம் தோல்விக்கு இது தான் காரணம் - இயக்குனர் விக்ரமன் சொன்னது

By subhashini · 3/2/2025

ஏ.ஆர்.ரகுமான் குறித்து இயக்குனர் விக்ரமன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் விக்ரமன். இவர் இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருந்தார். இவருடைய படங்கள் எல்லாம் குடும்பப்பாங்கான மற்றும் பெண்களின் மீதான சமூக அக்கறையை மையமாகக் கொண்டது. மேலும், இவர் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த புதுவசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார்.

இவருடைய இயக்கத்தில் வந்த படங்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரட் ஆக இருக்கிறது. கடைசியாக இவர் 2014 ஆம் ஆண்டு வெளியான நினைத்தது யாரோ என்ற படத்தை தான் இயக்கியிருந்தார். அதற்கு பிறகு எந்த படத்தையும் இயக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் விக்ரமன், எஸ்.ஏ ராஜ்குமார்- சிற்பி ஆகியோருக்கும் எனக்கும் செட்டாகிவிட்டது. எனக்கு என்ன பிடிக்கும் என்று அவங்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்களிடம் என்ன மாதிரி வாங்கலாம் என்றெல்லாம் எனக்குமே தெரியும்.

விக்ரமன் பேட்டி:

அதுவே நான் ஏ.ஆர் ரகுமானுடன் ஒர்க் பண்ணும்போது நமக்கு இந்த மாதிரி பாடல் வேண்டும் என்று கேட்போம். அவரும் முதல் டியூனிலேயே இம்ப்ரஸ் செய்து விடுவார். நீ கட்டும் சேலை மடிப்பில் என்ற ஒரு குத்து பாட்டு போட்டு இருந்தார். அது எனக்கு பிடிக்கவில்லை. அப்போது ப்ரொடியூசர், ரகுமான் சார் எந்த டியூன் கொடுத்தாலும் வாங்கி விடுங்கள். அவரை பிடிக்க ஆறு மாதமாகும். ரொம்ப பிசியா இருக்கார் என்று சொன்னார். எனக்கு அவர் முதலில் போட்ட பாடல் பிடிக்காததால் அடுத்து லிரிக்ஸ் எழுதிட்டு வாங்க, அதற்கு ஏற்ப நான் மியூசிக் போடுகிறேன் என்று சொன்னார்.

https://www.youtube.com/watch?v=LznOEyquMc4

ரகுமான் சொன்ன அட்வைஸ்:

அப்படித்தான் பழனி பாரதியை வைத்து பாடல் எழுதி இசையமைக்கப்பட்ட பாடல் தான் நீ கட்டும் சேலை மடிப்பில். நானுமே நன்றாக ஓடுமென்றுதான் நினைத்தேன். ஆனால், ரகுமான் படம் பார்த்துவிட்டு ஒரு விஷயம் சொன்னார். அதை நான் கேட்கவில்லை. அதை இன்று உணர்கிறேன். படத்தில் நிறைய பழைய பாடல்களை பயன்படுத்தி இருந்தேன். படம் பார்த்த ரகுமான் இது ஒரு சீரியஸான படம். இதுதான் படத்தை நீர்த்துப் போக செய்கிறது என்றார். ரகுமானுடைய கணிப்பு 100 சதவீதம் உண்மை. நான் தான் தவறு செய்து விட்டேன். புதிய மன்னர்கள் படம் ஜனவரி 1ஆம் தேதி வந்தது. பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள்ளே முடிந்துவிட்டது.
இடையில் என் தங்கை கல்யாணம் ஒரு ஆறு நாள் பாடல் எடுப்பது மட்டும் தான் பாக்கி. கொஞ்சம் பணப் பிரச்சினையால் படம் தாமதமாக ஆனது.

https://www.youtube.com/watch?v=Dkj8YQfgGiM&t=9s

ரகுமான் குறித்து சொன்னது:

அப்போது ரகுமான் அமெரிக்கா கிளம்பிவிட்டார். 70% ரீரெக்கார்டிங் முடித்து விட்டதால் மீதத்தை முடித்து தருகிறேன் என்று சொன்னார். நான் தான் படம் தாமதம் ஆகுது என்று சொல்லி ராஜமணி என்ற ஒரு மலையாள இசையமைப்பாளர் வைத்து ரெக்கார்டிங் செய்தேன். அது ஒர்க் அவுட் ஆகவில்லை. இதை நான் ஒத்துக் கொள்கிறேன். அதேபோல் புது வசந்தம் என்னுடைய முதல் படம். நான் இயக்குனராக இரொம்பவே சிரமப்படவில்லை. ஆனால், இயக்குனர் ஆன பின் தான் ரொம்ப கஷ்டப்பட்டேன். உதவி இயக்குனர்களாக இருந்தபோது நிறைய சிரமங்கள் இருந்தது இல்லை என்று சொல்ல முடியாது. புது வசந்தம் என்னை நம்பி சௌத்ரி சார் கொடுத்தார். இது சின்ன படங்களிலேயே கொஞ்சம் காஸ்ட்லியான பட்ஜட் தான்.

சௌத்ரி குறித்து சொன்னது:

சூப்பர் குட் என்ற லோகோ என்னுடைய ஐடியா தான். இன்னைக்கு வெற்றிகரமாக 98 படங்கள் முடித்து விட்டார்கள். அப்போது முரளி-சித்தாரா டேட் மட்டும் தான் இருந்தது. என்னுடைய உதவி இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் செட்டில் ரொம்பவே கோபப்படுவார். நான் ரொம்ப கூல். ரவிக்குமாருக்கு அடுத்த இடத்தில் இருக்கக்கூடிய உதவி இயக்குனர் அவர் மேலே இருந்த ஒரு ஈகோ கிளாசில் படம் ஓடாதுன்னு சவுத்ரி சாரிடம் சொல்லிவிட்டார். ஆனால், சவுத்ரி சார் எனக்கு ஆதரவாக இருந்தார். அதனால் இன்றைக்கும் அவருக்கு நான் நன்றியுடன் இருக்கிறேன். நான் சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸ்க்கு ஐந்து படம் பண்ணி இருக்கிறேன். என்னுடைய காட்பாதர் ஆர்.பி சவுத்ரி சார் தான் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்

behindtalkies AMP · Quick view
View full