அப்பவே 10 லட்சம் பைக், பெரிய ஹீரோன்னு தலைக்கனம்? அஜித் பற்றி இயக்குனர் விக்மரன் சொன்ன விஷயம்
அஜித் பற்றி இயக்குனர் விக்ரமன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் விக்ரமன். இவர் இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருந்தார். இவருடைய படங்கள் எல்லாம் குடும்பப்பாங்கான மற்றும் பெண்களின் மீதான சமூக அக்கறையை மையமாகக் கொண்டது. மேலும், இவர் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த புதுவசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார்.
அதனை தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கி இருந்தார். இவருடைய இயக்கத்தில் வந்த படங்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரட் ஆக இருக்கிறது. கடைசியாக இவர் 2014 ஆம் ஆண்டு வெளியான நினைத்தது யாரோ என்ற படத்தை இயக்கியிருந்தார். அதற்கு பிறகு இவர் எந்த படத்தையும் இயக்கவில்லை. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித் குறித்து விக்ரமன் கூறியிருந்தது, அஜித் ஒரு பக்கா ஜென்டில்மேன்.
விக்ரமன் பேட்டி:
புதிய மன்னர்கள் படத்தில் அவர் நடிக்க வேண்டியது. அப்போது அவரிடம் நடிக்க கேட்டோம். ஆனால், அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அதனால் தான் அவரால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை.
இந்த தகவலை கூட அவருடைய மேனேஜர் தான் சொல்லி அனுப்பியிருந்தார். அதற்கு பின் தான் காதல் கோட்டை உட்பட பல படங்களில் நடித்து அஜித் மிகப் பெரிய ஹீரோவானார். அந்த நேரத்தில் நானும் அவரிடம் சென்று உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற படத்தில் நடிக்க கேட்டேன்.
https://www.youtube.com/watch?v=SwBeJWyL_JU
அஜித் வாய்ப்பு:
உடனடியாக அவர் என்னுடைய அலுவலகத்திற்கு வந்தார். அவருடைய கதாபாத்திரம் பற்றி அவருக்கு சொன்னேன். உடனே அவர் நான் நடிக்கிறேன், கதை எதுவும் தேவையில்லை என்று சொன்னார். அந்த படத்திற்காக பகல், இரவு என்று பார்க்காமல் அஜித் ரொம்ப வேலை பார்த்தார். அப்போதே அவருக்கு ரேசிங் மீது நிறைய காதல் இருந்தது. அந்த படத்தில் நானும் அவரும் ரொம்ப க்ளோசாக இருந்தோம். நான் முட்டுக்காட்டில் ஒரு வீட்டில் வைத்து தான் படம் எடுத்துக் கொண்டிருப்பேன்.
அஜித் ரேஸ்,சினிமா:
அப்போது அவர் பைக்கில் தான் வருவார். அப்போதே அவருடைய பைக் 10 முதல் 15 லட்சம் வரை இருக்கும்.
நான் சொல்வது 98 காலகட்டத்தில் அந்த பைக்கினுடைய விலை. அப்போது அவர் ஹெல்மெட் கூட அணிய மாட்டார். அதுமட்டுமில்லாமல் அவர் பீக்கில் இருக்கும் ஒரு ஹீரோ. எல்லா பெண்களுக்குமே அஜித் என்றால் ரொம்பவே பிடிக்கும். ஆனால், அவர் சாதாரணமாக தான் இருப்பார். என்னுடைய மகனை நான் சினிமா துறையில் அறிமுகப்படுத்தும் போது கூட அவரை சந்திக்க வேண்டும் என்று கேட்டேன்.
விடாமுயற்சி:
உடனே அவர் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வர வைத்தார். என்னை பார்த்தவுடனே அஜித், சார் நன்றாக இருக்கிறீர்களா? என்று ரொம்ப அன்பாக பேசி சில அறிவுரைகள் எல்லாம் எல்லாம் என் மகனுக்கு சொல்லியிருந்தார் என்று கூறி இருக்கிறார். சமீபத்தில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த படம் விடா முயற்சி. இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.