இயக்குனர் விக்ரமனின் மகன் ஹீரோவாக அறிமுகம் ஆகும் படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் விக்ரமன். இவர் இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருந்தார். இவருடைய படங்கள் எல்லாம் குடும்பப்பாங்கான கதை மற்றும் பெண்களின் மீதான சமூக அக்கறையை மையமாகக் கொண்டது.

மேலும், இவர் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த புதுவசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவர் பல பிரபலமான நடிகர்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவருடைய மகன் ஹீரோவாக நடிக்க இருக்கும் படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement

விக்ரமனின் மகன் நடிக்கும் படம்:

விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா. இவர் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தயாரிக்கும் படத்தில் ஹிட் லிஸ்ட் என்ற படத்தில் நடிக்கிறார். இது கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கும் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை கே எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களான சூரியக்கதிர் மற்றும் கார்த்திகேயன் இணைந்து இயக்குகிறார்கள். இந்த படத்தில் கதாநாயகனாக விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நடிக்கிறார்.

ஹிட் லிஸ்ட் படம்:

அதோடு சினிமா உலகில் ஆரம்ப காலத்தில் கே எஸ் ரவிக்குமார் எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கு இயக்குனர் விக்ரமன் பல உதவிகள் செய்து இருந்தாராம். அந்த நட்புக்கு மரியாதை செய்யும் விதமாக விக்ரமனின் மகன் கனிஷ்காவை கதாநாயகனாக இந்த படத்தில் நடிக்க வைக்கிறார் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும், இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

Advertisement

படத்தின் பூஜை விழா:

இந்நிலையில் இந்த படத்தின் பூஜை நேற்று நடந்து முடிந்தது. இந்த விழாவில் R.B.சௌத்திரி, சத்யஜோதி தியாகராஜன், P.L.தேனப்பன் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் எழில் கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன், எஸ்.ஏ.சந்திரசேகர், மனோபாலா, லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ், சீனு ராமசாமி, வெற்றி மாறன், பிரபு சாலமன், பாண்டியராஜன், ஆர்.கண்ணன், சரண், ரமேஷ் கண்ணா, பேரரசு, ராஜகுமாரன், தேவயானி, ஜெயப்பிரகாஷ் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

Advertisement

படம் குறித்த தகவல்:

இவர்கள் எல்லோரும் நடிகர் விஜய் கனிஷ்காவை வாழ்த்தி இருந்தார்கள். இந்த படம் காமெடி, ஆக்சன் பாணியில் உருவாக்கப்பட இருக்கிறது. இந்த படம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இருப்பதாக கூறி இருந்தார்கள். கூடிய விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement