இவர்கள் நாலு பேரை சமாளித்தாலே விஜய் வெற்றி பெறுவார் - இயக்குனர் வினோத் ஓபன் டாக்

By subhashini · 1/1/2026

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் கடைசியாக விஜயின் நடிப்பில் வெளியாகியிருந்த ‘கோட்’ படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், கௌதமேனன், பிரியாமணி உட்பட பாபி நடித்து இருக்கிறார்கள். தெலுங்கில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான KVN தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. மேலும், இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

ஜனநாயகன் படம்:

மேலும், சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக மலேசியாவில் நடைபெற்று இருந்தது. மலேசியாவே மிரள வைக்கும் அளவிற்கு இந்த விழாவை நடத்தி இருந்தார்கள். இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய விஷயங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருந்தது. தற்போது ஜனநாயகன் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வினோத் பேட்டி:

இந்த நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் இயக்குனர் வினோத் அவர்கள் விஜயின் அரசியல் குறித்து கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், முட்டாள்கள் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு எது நல்லது எது கேட்டது என்று தெரியாதவர்கள்.
அறிவாளிகளுக்கு நல்லது கெட்டது எல்லாமே தெரியும்.

விஜய் அரசியல் பற்றி சொன்னது:

அறிவாளி அயோக்கியர்கள், எது நல்லது என்பதை வெளியில் சொல்லாமல் அதை தன்னுடைய சுயநலத்துக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். முட்டாள் அயோக்கியர்கள், அறிவாளி அயோக்கியர்களின் அடியாள் போல மோசமான விஷயங்களை செய்வார்கள். இந்த நாலு வகை மனிதர்களை சமாளித்தாலே போதும் விஜய் அரசியலில் வெற்றி பெறுவார் என நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full