தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான விஜய் இன்று (ஜூன் 29 ) தனது இரண்டாம் திருமணம் குறித்த அறிவிப்பை அறிவித்தார். அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2007 ஆம் வெளியான ‘கிரீடம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ எல் விஜய். அதன் பின்னர் “மதராசபட்டினம்’ , ‘தெய்வ திருமகள்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிவர் இயக்குனர் ஏ எல் விஜய்.

மேலும், இவர் இயக்கிய ‘தெய்வ திருமகள், தலைவா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலா பாலுக்கும், ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. சில வருடங்கள் தொடர்ந்த இவர்களது காதல் பின்னர் 2014 திருமணத்தில் முடிந்தது. திருமணம் நடைபெற்று மூன்றே ஆண்டுகளில் விவகாரத்தில் முடிந்தது. இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் தான் இவர்கள் பிரிந்தனர் என்று கூறப்பட்டது.

இதையும் பாருங்க : லாஸ்லியா குறித்து முன்னாள் பிக் பாஸ் வின்னர் ரித்விகா போட்ட ஸ்டேட்டஸ்.!

Advertisement

ஆனால், விவாகரத்திற்கு பின்னரும் இவர்கள் இருவரும் அவரவர் வேலைகளை செய்து வருகின்றனர். நடிகை அமலா பால் தற்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார். அதே போல இயக்குனர் ஏ எல் விஜய்யும் தொடர்ந்து பல படங்களை இயக்கிவருகிறார். இந்நிலையில் இயக்குனர் விஜய் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

தற்போது விஜய்கு 39 வயதாகிறது இதனால் இவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவெடுத்துள்ளாராம். ஏ எல் விஜய் சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு – அனிதா தம்பதியின் மகள். எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களது திருமணம் வரும் ஜூலை 11ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில் தனது இரண்டாம் திருமணம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள விஜய் எனது குடும்பத்தினர் என் வாழ்க்கை துணைவியாக ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துள்ளனர் டாக்டர் ஆர் ஐஸ்வர்யாவுடன் எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று இயக்குனர் விஜய் குறிப்பிட்டுள்ளார் . தற்போது விஜய் திருமணம் செய்துகொள்ள போகும் பெண்ணின் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.  

Advertisement