தென்னிந்திய சினிமா உலகில் டிஸ்கோ சாந்தியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவரின் உண்மையான பெயர் சாந்தகுமாரி. இவர் 1985 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதற்கு பிறகு பல படங்களில் நடித்தும், நடனமாடியும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இவர் பெரும்பாலும் படங்களில் கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். அதோடு படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் இவர் பாலிவுட்டிலும் நடித்துள்ளார். இதனிடையே டிஸ்கோ சாந்தி, ஸ்ரீஹரி என்பவரை 1996 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் உடல் குறைவால் ஸ்ரீஹரி 2013ம் ஆண்டில் இறந்துவிட்டார். இவரும் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை டிஸ்கோ சாந்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது சினிமா பயணம் முதல் தன் கணவர் இறந்தது குறித்து கூறியிருப்பது,

Advertisement

டிஸ்கோ சாந்தி நடிக்க வந்த காரணம்:

குடும்ப வறுமைக்காக தான் நான் சினிமாவில் விருப்பமில்லாமல் நடிக்க தொடங்கினேன். நான் கதாநாயகியாக தான் சினிமாவில் நடிக்க சென்றேன். ஆனால், என்னை கவர்ச்சி நடிகையாக திரையுலகம் மாற்றி விட்டது. அதனால் நான் ஆரம்ப காலங்களில் ஒவ்வொரு நாளும் அழுது புலம்பி இருக்கிறேன். ஒரு சில நேரங்களில் சினிமா வேண்டாம் என்று கூட முடிவு செய்திருக்கிறேன். ஆனால், வறுமை சூழ்நிலை காரணமாக நடித்தேன். அதோடு என் கவர்ச்சி நடனத்தை பார்த்து நானே முகம் சுளித்து போனேன். என் மீது எனக்கு கோபமும், வேதனையும் வந்தது.

டிஸ்கோ சாந்தி- ஸ்ரீஹரி திருமணம்:

என் படங்களை பார்க்க வேண்டாம் என்று நான் என் குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டேன். அதற்கு பிறகு நாங்கள் படமே சேர்ந்து பார்க்கவில்லை. பின் ஸ்ரீஹரி, நானும் நல்ல நண்பர்கள். ஒருநாள் கோயிலில் சாமி கும்பிட்டு கொண்டிருக்கும் போது எனக்கு தெரியாமலே அவர் என் கழுத்தில் தாலி கட்டினார். நான் கல்யாணம் ஆனால் உண்டியலில் தாலியை போடுவதாக வேண்டி இருந்தேன். அதனால் அவர் கட்டிய தாலியை உண்டியலில் போட்டுவிட்டு பிறகு என்னுடன் கூட பிறந்தவர்களுக்கு திருமணம் ஆனவுடன் வீட்டில் பெரியோர்கள் சம்மதத்துடன் எங்களுடைய திருமணம் நடந்தது.

Advertisement

அநியாயமாக என் கணவர் இறந்தார்:

எங்களுடைய குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக தான் போனது. ஆனால், திடீரென்று ஸ்ரீஹரிக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அவரை நாங்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து இருந்தோம். அப்போது அவர் உடல்நிலை தேறி நலமாகத்தான் இருந்தார். ஆனால், மருத்துவர்கள் அவருக்கு போட்டோ ஊசியினால் மூக்கு வாயெல்லாம் ரத்த வாந்தி எடுத்து அநியாயமாக என் கணவர் உயிரிழந்தார். இதுகுறித்து விசாரித்த போது தவறுதலாக நடந்து விட்டது எங்களை மன்னித்துவிடுங்கள் அதற்கு தேவையான பணம் தருகிறோம் என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.

Advertisement

டிஸ்கோ சாந்தி செய்யும் உதவிகள்:

எவ்வளவு பணம் தந்தாலும் என்னுடைய கணவரை திருப்பி தரமுடியாது என்று சொல்லி மருத்துவ செலவை மட்டும் கட்டி விட்டு என் கணவரை தூக்கி கொண்டு வந்து விட்டோம். என் கணவருக்கு முன் என் மகள் இறந்து விட்டாள். அவருடைய பெயரில் என் கணவர் அறக்கட்டளை நடத்தி வந்ததார். தற்போது அதைத்தான் நான் செய்து வருகிறேன். என்னுடைய மகன்கள் எனக்கு பக்கபலமாக இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

Advertisement