கங்கை நதிக் கரையில் பூஜை, சர்ச்சையில் சூர்யா பட நடிகை - திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.
கோயிலுக்கு திஷா பதானி அணிந்து சென்றிருந்த ஆடை குறித்த சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் திஷா பதானி. இவர் 2015ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த லோபர் என்ற படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதன்பின் இவர் 2016ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டு வீரர் எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி இருந்தார்.
இந்த படத்தில் இவர் எம்எஸ் தோனியின் முதல் காதலியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இந்த படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து பாலிவுட்டில் இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. பின் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த பாகி 2 என்ற பாலிவுட் படத்தில் நடித்திருந்தார் திஷா பதானி.
திஷா பதானி குறித்த தகவல்:
இந்த படத்தில் இவர் டைகர் ஷெராப் உடன் இணைந்து நடித்திருந்தார். அதன் பின் 2019ஆம் ஆண்டு வெளிவந்திருந்த பாரத் என்ற படத்திலும் இவர் நடித்து இருந்தார். தற்போது இவர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் சிவா இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை யூவி கிரியேஷன் நிறுவனமும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.
கங்குவா படம்:
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் 3டில் உருவாக இருக்கிறது. இந்த படம் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் வகையில் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் பான் இந்திய படமாக 10 மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர்.
கோயிலில் பூஜை செய்த கங்குவா:
இந்த நிலையில் திஷா பதானியை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, சமீபத்தில் திஷா அவர்கள் படபிடிப்புக்காக வாரணாசி சென்றிருக்கிறார். அங்கு அவர் கங்கை நதிக்கு நன்றி கடனாக தினமும் மாலை வேளையில் செய்யப்படும் கங்கா ஆரத்தி பூஜையை செய்திருக்கிறார். இவருடன் அவருடைய உறவினர்களும் இருந்தனர். இது சம்பந்தமான வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
விமர்சிக்கும் நெட்டிசன்கள்:
அந்த வீடியோவில் திஷா பதானி மிகவும் குட்டையான டாப், ஜீன்ஸ் அணிந்து பூஜையில் ஈடுபட்டிருக்கிறார். இது குறித்து பலரும் கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்து வருகின்றார்கள். அதிலும் சிலர் கோவிலுக்கு இப்படியா வருவது? என்று திஷா பதானியை வெளுத்து வாங்கி வருகிறார்கள். தற்போது சமூக வலைத்தளத்தில் திஷாவை விமர்சிக்கும் பதிவு தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.