மதுரையில் நேற்று நடைபெற்ற அதிமுகவின் பிரமாண்ட மாநாட்டிற்கு கலந்து கொண்ட  தொண்டர்களுக்கு பணம் விநியோகம் செய்யப் பட்ட வீடியோ சமுக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.மதுரையில் நேற்று  நடைபெற்று வந்த அதிமுகவின் மாநாட்டில் லட்சகக்கான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பிதனர். நேற்று நடைபெற்று வந்த மாநாட்டின் மூலம் முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர் செல்வத்திற்கு தக்க பதிலடியாக இருக்கும் என்றும் கூறி வந்தனர்.

அதிமுகவின் மாநாடு காரணமாக மதுரையில் நேற்று நடக்கவிருந்த திமுக உண்ணாவிரதத்தை மாற்றி அமைத்தது. அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தென் மாவட்டங்களை மையமாக வைத்து நடத்தப்படும் மாநாட்டின் மூலம் அதிமுகவின் தொண்டர்கள் யாருடைய பக்கம் நிற்கின்றன என்பதை நிரூபிக்கும் வகையில் இருக்கும் எனவும் அரசியல் தலைவர்கள் தெறிக்கின்றன. மதுரையில் நடத்தபடும் மாநாட்டிக்காக அக்கட்சி தலைவர்கள் தீவிரமாக செயல் பட்டு வருகின்றனர்.

Advertisement

மற்றொரு பக்கம் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் அதிமுக கட்சியின் தொண்டர்கள் தான் பக்கம் தான் இருப்பதாக காட்டிக்கொள்ள கொங்கு மண்டலங்களில் அதாவது எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் எழுச்சி மாநாடு நடத்த உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி அதற்க்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மதுரையில் நடைபெற்று வந்த அதிமுக மாநாட்டில் வழங்கப்பட்ட உணவு, நன்றாக இல்லை என அதிருப்தி அடைந்த தொண்டர்கள், உணவை அங்கேயே வீசிச்சென்றனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று நடைபெற்று வந்த மாநாட்டிற்கு அதிமுக தொண்டர்கள் தங்குவதற்கான அறைகள், உணவுகள் ஏற்பாடு செய்ய பட்டது.

Advertisement

தொண்டர்களை வரவைப்பதர்க்கான கார், வேன், பேருந்துகளை முன்பதிவு செய்து 2 சிறப்பு ரயில்களை இயக்கியும் தற்போது தொண்டர்களுக்கும் 3 வேலையும் உணவு வழங்கப்பட்டு வந்தது. நிகழ்ச்சியை தொலை துரத்தில் இருந்து காணும் வகையில் 15 க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட உள்ளது.உணவு குறித்து கூறுகையில் மாநாடு அன்று வரும் தொண்டர்கள் அனைவருக்கும் 3 வேலையும் உணவுகள் வழங்கப்பட்டு வந்தது.

Advertisement

பணம் விநியோகம்:

நேற்று மதுரையில் நடைபெற்ற பிரமண்ட மாநாட்டிற்கு தொலை துரங்களில் இருந்து வந்த அதிமுகவினருக்கு பணம் விநியோகம் செய்யப் பட்டது. சில பகுதிகளில் இருந்து வந்தவர்களுக்கு 500 ரூபாயும் சில பகுதிகளில் இருந்து வந்த தொண்டர்களுக்கு 100 ரூபாய் மட்டுமே வழங்கப் பட்டது. 100 ரூபாய் மட்டுமே வழங்கபட்டதை வாங்கி கொண்டு அங்கிருந்து சென்றனர் அதிமுகவின் தொண்டர்கள். இந்த வீடியோ வானது சமூக வலை தளங்களில் தீயாய் பரவியது.     

Advertisement