பெண்களுக்கு அஜித் சார் எப்போதும் மரியாதை கொடுப்பார், ஆனால் - திவ்யா சத்யராஜின் பதிவு

By subhashini · 7/5/2025

அஜித் பற்றி சத்யராஜின் மகள் திவ்யா போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் சத்யராஜ். இவர் ‘கட்டப்பா’ என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கட்டி போட்டவர். ‘கடலோர கவிதைகள்' என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தார். அதை தொடர்ந்து இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து இருந்தார்.

மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் ஆரம்பத்தில் படங்களில் முன்னணி நடிகராக இருந்தாலும் தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சத்யராஜுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். சிபிராஜ் படத்தில் நடித்து வருகிறார். ஆனால், திவ்யா அப்படி இல்லை. இவர் சிறு வயதில் படங்களில் நடிக்க ஆசைப்பட்டாலும், பின்னர் வேறு துறைக்கு மாறிவிட்டார்.

திவ்யா சத்யராஜ்:

தனது அப்பாவை போலவே இவரும் ஒரு நாத்திகவாதி. இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிஷனிஸ்ட்களில் ஒருவராக சத்யராஜ் மகள் திவ்யா இருக்கிறார். இவர் நியூட்ரிஷியன் துறையில் எம். ஃபில் பட்டம் பெற்றுள்ளார். சர்வதேச அளவில் நியூட்ரிஷன் துறையில் பல கான்ஃபரன்ஸ்களும் நடத்தி இருக்கிறார்.
மேலும், சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் திவ்யா அடிக்கடி ஊட்டசத்துக் குறித்தும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பதிவிட்டு வருகிறார்.

அரசியலில் திவ்யா:

சமீபத்தில் தான் திவ்யா திமுகவில் இணைந்தார். கட்சியில் இணைந்த உடனே இவருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டது. திமுகவில் இணைந்த பிறகு முதன்முறையாக அரசியல் மேடையில் திவ்யா சத்யராஜ் பேசி இருந்தார். அதில் அவர் விஜயை விமர்சித்து இருந்தது அனைவரும் அறிந்ததே. இப்படி இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கேள்விகளுக்கு திவ்யா சத்யராஜ் பதில் அளித்து இருக்கிறார். அதில் அவர், பலர் என்னிடம் அஜித் பிடிக்குமா? விஜய் பிடிக்குமா? என்று கேள்வி எழுப்பினார்கள்.

அஜித் பற்றி சொன்னது:

எனக்கு எப்போதுமே அஜித் சார் தான் பிடிக்கும் என்று சொன்னேன். அவர் சிறந்த நடிகர். முக்கியமாக அவர் பெண்களுக்கு மரியாதை கொடுக்கிறார். தன்னுடைய வாழ்க்கையில் உள்ள பெண்களை ரொம்ப மரியாதையுடன் நடத்துபவர். அவரின் ரசிகர்களும் அதை பின்பற்றுகிறார்கள். அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளம் பக்கங்களில் கோழைகளை போல துன்புறுத்தியது கிடையாது. அவர்கள் உயர்ந்த பண்புடன் நடந்து கொள்கிறார்கள். அஜித் சார், தன்னுடைய ரசிகர்கள் ஆன்லைனில் பெண்களை அச்சமூட்டுவதையோ, அவமரியாதை செய்வதையோ ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்.

View this post on Instagram

A post shared by Divya Sathyaraj (@divya_sathyaraj)

சிறந்த தலைவர்:

அவர் அமைதியாக பலருக்குமே உதவி செய்திருக்கிறார். பெண்களுக்கு எதிரான மிரட்டல்களையோ, துன்புறுத்தல்களையோ ஊக்குவிக்கும் அல்லது அதை பற்றி மௌனமாக இருக்கும் எந்த தலைவரும் உண்மையான தலைவன் என்று சொல்ல தகுதியற்றவர் என்று தான் நான் நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார். திவ்யா சத்யராஜின் இந்த பதிவுக்கு பலருமே கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஒரு சிலர் இவர் விஜயை தாக்கி பேசுகிறாரா என்றும் கூறுகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full