ரொம்ப வேதனையான கட்டத்தை கடந்து இருக்கிறேன்-தனது அம்மா குறித்து சத்யராஜ் மகள் திவ்யா உருக்கம்
தன்னுடைய அம்மா குறித்து எமோஷனலாக சத்யராஜ் மகள் போட்டு இருக்கும் உருக்கமான பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் சத்யராஜ். இவர் ‘கட்டப்பா’ என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கட்டி போட்டவர். ‘கடலோர கவிதைகள்’ என்ற படத்தின் மூலம் தான் இவர்கள் சினிமா உலகில் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தார்.
அதை தொடர்ந்து இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து இருந்தார்.
மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் ஆரம்பத்தில் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் பின்னர் தமிழ் கதாபாத்திரங்களில் முன்னணி நடிகராக திகழ்ந்தார். தற்போதும் இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது.
சத்யராஜ் குறித்த தகவல்:
மேலும், இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘ தோழர் சேகுவரா’ . சத்யராஜ் உடன் இணைந்து நாஞ்சில், ராஜேந்திரன், கூல் சுரேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. தற்போது சத்யராஜ் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார்.
சத்யராஜ் குடும்பம்:
இது மட்டும் இல்லாமல் இன்னும் சில படங்களில் அவர் கமிட்டாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சத்யராஜுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். சிபிராஜ் படத்தில் நடித்து வருகிறார். ஆனால், திவ்யா அப்படி இல்லை. இவருக்கு சிறு வயதில் படங்களில் நடிக்க ஆசைப்பட்டாலும், பின்னர் வேறு துறைக்கு மாறிவிட்டார். தனது அப்பாவை போலவே இவரும் ஒரு நாத்திகவாதி. இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிஷனிஸ்ட்களில் ஒருவராக சத்யராஜ் மகள் திவ்யா இருக்கிறார்.
திவ்யா குறித்த தகவல்:
இவர் நியூட்ரிஷியன் துறையில் எம். ஃபில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், சர்வதேச அளவில் நியூட்ரிஷன் துறையில் பல கான்ஃபரன்ஸ்களும் நடத்தி இருக்கிறார். தற்போது சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் திவ்யா அடிக்கடி ஊட்டசத்துக் குறித்தும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர், என் அம்மா 4 வருஷமாக கோமாவில் இருக்கிறார். அவங்களுக்கு PEG மூலம் தான் உணவளிக்கிறோம். இதனால் முற்றிலும் நாங்கள் உடைந்து போனோம். ஆனால், நம்பிக்கையோடு மருத்துவ முன்னேற்றத்திற்காக காத்திருப்போம் என்று பதிவிட்டு இருந்தார். இவரின் பதிவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியாகி ஆறுதலாக பதிவிட்டு இருந்தார்கள் இருந்தார்கள்.
திவ்யா பதிவு:
இந்த நிலையில் சத்யராஜின் மகள் திவ்யா தன்னுடைய அம்மா குறித்து பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், கடந்த சில ஆண்டுகளாகவே அம்மாவுடைய உடல் நிலை காரணமாக எங்களுடைய வாழ்க்கை சவாலாக இருக்கிறது. வீட்டில் ஐசியு வை வைத்து கோமா நோயாளியை பார்ப்பது கஷ்டமானது. ஆனால் என்னுடைய பெற்றோரை பாதுகாக்க எது வேண்டுமானாலும் நான் செய்வேன். எனக்கும் தனிப்பட்ட வாழ்க்கையில் ரொம்ப வேதனையான கட்டத்தை தான் கடந்து வருகிறேன். ஊட்டச்சத்து நிபுணராக என்னுடைய வாழ்க்கை முன்னேற வைத்துள்ளது என்று கூறியிருக்கிறார்.