விஜய்யை பார்த்து உதய் அண்ணா பயப்படுறாருன்னு சொல்வது - ஆவேத்தில் திவ்யா சத்யராஜ் அளித்த பேட்டி

By subhashini · 12/5/2025

விஜயை வெளுத்து வாங்கி திவ்யா சத்யராஜ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் சத்யராஜ். இவரின் மகள் தான் திவ்யா. சமீபத்தில் தான் திவ்யா திமுகவில் இணைந்தார். கட்சியில் இணைந்த உடனே இவருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டது. திமுகவில் இணைந்த பிறகு முதன்முறையாக அரசியல் மேடையில் பேசிய திவ்யா சத்யராஜ், விஜயை விமர்சித்து இருந்தது அனைவரும் அறிந்ததே. பின் கடந்த வாரம் சோசியல் மீடியாவில் திவ்யா சத்யராஜ், எனக்கு எப்போதுமே அஜித் சார் தான் பிடிக்கும். அவர் சிறந்த நடிகர். முக்கியமாக அவர் பெண்களுக்கு மரியாதை கொடுக்கிறார். தன்னுடைய வீட்டில் உள்ள பெண்களை ரொம்ப மரியாதையுடன் நடத்துபவர். அவரின் ரசிகர்களும் அதை பின்பற்றுகிறார்கள். அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளம் பக்கங்களில் கோழைகளை போல துன்புறுத்தியது கிடையாது. பெண்களுக்கு எதிரான மிரட்டல்களையோ, துன்புறுத்தல்களையோ ஊக்குவிக்கும் அல்லது மௌனமாக இருக்கும் எந்த தலைவரும் உண்மையான தலைவன் என்று சொல்ல தகுதியற்றவர் என்று தான் நான் நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.

இதன் மூலம் இவர் மறைமுகமாக விஜய்யை தான் டார்கெட் செய்து பேசுகிறார் என்றெல்லாம் சர்ச்சை எழுந்திருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் திவ்யா சத்யராஜ், தமிழக முதல்வர் அளித்த தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பணி எனக்கான பொறுப்பை இன்னும் அதிகமாக இருக்கிறது, குறிப்பாக, என்னை சின்னப் பெண் என்ற மாதிரி பார்க்காமல் ரொம்ப சமமாக நடத்துகிறார்கள். நான் மட்டும் இல்லை, திமுகவில் உள்ள எல்லா பெண்களும் அப்படித்தான் நடத்தப்படுகிறார்கள். நாங்கள் நினைத்த நேரத்தில் முதல்வரை பார்க்கலாம், துணை முதல்வரையும் சந்திக்கலாம். ஆனால், விஜய் சாரை அவங்க கட்சியினர் அப்படி அணுக முடியுமா? அப்படி அணுகினால் என்ன நடக்கும் என்பது தெரியுமில்ல?
பொதுமக்களும் ரசிகர்களும் முதலில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

திவ்யா சத்யராஜ் பேட்டி:

விஜய் சாரை விமர்சிப்பதில் எனக்கு எந்த ஒரு உள்நோக்கமும், தனிப்பட்ட காரணமும் கிடையாது. அவரோட நடிப்பு, டான்ஸ் எல்லாமே பிடிக்கும். ஆனால், அவருடைய ரசிகர்கள் என்னை உருவகேலி செய்கிறார்கள். பெண்கள் மீது சமூக வலைத்தளங்களில் கொடூரத் தாக்குதல் நிகழ்த்தி இருக்கிறார்கள். ஆனால், அஜித் சார் ரசிகர்கள் அப்படி செய்தது கிடையாது. அஜித் சார் பெண்களை மதிக்கிற விதம், அணுகுமுறை எல்லாமே வெரி குட் என்று தான் சொல்லணும். அதனால்தான் நான் இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டிருந்தேன். அது விஜய் சார் ரசிகர்களுக்காகத்தான். நீங்களோ, நானோ அஜித் சாரை பார்க்க போனால் எழுந்து நின்று மரியாதை கொடுப்பார். அவர் குடும்பத்தில் இருக்கும் பெண்களை எப்படி மதிக்கிறார் என்று ஊருக்கே தெரியும். குறிப்பாக, அவரோட அம்மாவையும் மனைவியையும் சூப்பராக பார்த்துக் கொள்கிறார். அவர் எப்படி பெண்களை மதிக்கிறாரோ அதை அவருடைய ரசிகர்களும் பாலோ செய்கிறார்கள். ஆனால், விஜய் சார் ரசிகர்கள் அப்படி கிடையாது.

https://www.youtube.com/watch?v=iceqgc_tZwU

அஜித் பற்றி சொன்னது:

பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுவது, பெண்களை சமமாக பாவிக்காமல் கட்சியிலிருந்து வெளியேற்றுவது என்று பெண்களை மதிக்க தெரியாதவர்களாக இருக்கிறார்கள். உதாரணத்திற்கு வைஷ்ணவியை சொல்லலாம். நான் எல்லா விஜய் சார் ரசிகர்களையும் குற்றம் சொல்லவில்லை. ஒரு சிலர் அப்படித்தான் இருக்கிறார்கள். என்னோட அண்ணாவும் விஜய் சார் ரசிகர் தான். அதற்காக நான் விஜய் சாருக்கு சப்போர்ட் பண்ண முடியாது. தன்னோட ரசிகர் எந்த தவறு செய்தாலும் உடனடியாக அஜித் சார் கண்டித்து விடுவார். ஆனால், விஜய் சார் கண்டிக்கவும் மாட்டார். சமூக பொறுப்போடும் நடந்து கொள்ளவும் மாட்டார். இதுவரைக்கும் விஜய் சார் மக்கள் பிரச்சனைக்காக எத்தனை முறை குரல் கொடுத்திருக்கிறார்? நடிகர் சித்தார்த் எந்த மக்கள் பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக குரல் கொடுப்பார், களத்தில் நிற்பார்.

விஜய் பற்றிய விமர்சனம்:

சூர்யா அண்ணா அகரம் பவுண்டேஷன் மூலம் எத்தனை மாணவர்களை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். விஜய் சார் என்ன பண்ணினார்? சூர்யா அண்ணா அரசியலுக்கு வருவதற்கான முழு தகுதியும் இருக்கு. விஜய் சாருக்கு என்ன தகுதி இருக்கு? அவருடைய கனவு, ஆசை எல்லாமே முதல்வர் நாற்காலியை அடைவது தான். மக்கள் பிரச்சனைகளை நோக்கி கிடையாது. அரசியலுக்கு வந்த விஜய் பாராட்டும் படியான திட்டங்கள் ஏதாவது அறிவித்தாரா? என்று பார்த்தால் ஒன்றுமே கிடையாது. ஆக மொத்தம் எந்த தெளிவும் இல்லாமல் அரசியலுக்கு வந்திருக்கிறார். அரசியலில் அவருக்கு அனுபவம் இல்லை. அதனால் தான் அவர் அரசியலுக்கு தகுதியற்றவர் என்று சொல்கிறேன். உதய் அண்ணாவுக்கும் அரசியலில் அனுபவம் இருக்கா? என்று கேட்பவர்கள் நிச்சயம் முட்டாள்கள் தான்.

https://www.youtube.com/watch?v=_3vQlgemXLg

உதய் பற்றி சொன்னது:

அவர் சட்டமன்ற தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார். மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதுவும் தொடர்ச்சியாக களப்பணி ஆற்றிக்கொண்டு வருகிறார். சட்டமன்ற உறுப்பினர், விளையாட்டு துறை அமைச்சர், துணை முதல்வர் என்று படிப்படியாக முன்னேறி இருக்கிறார். எடுத்த உடனே அவருக்கு துணை முதல்வர் பதவியை கொடுக்கவில்லை. ஆனால், விஜய் சார் எடுத்தவுடன் முதல்வராக துடிக்கிறார். வரும் தேர்தலில் எத்தனை ஓட்டு வாங்குகிறார் என்று பார்க்கலாம்? அதேபோல் நேற்று வந்த புது முகமான விஜய் சாரை பார்த்து உதய் அண்ணா பயப்படுவார் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது, அது நியாயமும் கிடையாது. நான் ஒரு அடல்ட். இது என்னுடைய தனிப்பட்ட அரசியல் கருத்து. என் கருத்துகளில் அப்பா எப்போதுமே தலை விடுவது கிடையாது. அண்ணனும் அப்படித்தான். எங்க குடும்பமே ரொம்ப முற்போக்கான குடும்பம். அப்படி இருக்கும்போது என்னோட தனிப்பட்ட விருப்பு வெறுப்பு கருத்துகளில் எப்படி தலையிடுவார்கள்? அந்த விஷயத்தில் நான் ரொம்ப லக்கி என்று தான் சொல்லணும் என்று பல விஷயங்களை கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full