கர்ப்பமாக்கி விட்டு விட்டுச்சென்ற கணவர் - மகளின் முதல் பிறந்தநாளில் செவ்வந்தி சீரியல் நடிகை போட்ட உருக்கமான பதிவு.

By Arun · 8/4/2024

தனது மகளின் முதல் பிறந்தநாளில் திவ்யா பதிவிட்டு இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருந்தது அர்னவ்-திவ்யா விவகாரம் தான். இவங்க வேற யாரும் இல்லைங்க, செல்லம்மா சீரியல் நடிகர் ஆர்னவ், செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா. இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து இருந்தார்கள்.பின் கடந்த ஆண்டு தான் ரகசியமாக திருமணம் செய்து இருந்தனர். இவர்கள் இருவரும் இதற்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற தொடரில் நடித்து இருந்தார்கள்.

அதோடு இதற்கு முன்பே திவ்யாவிற்கு திருமணம் ஆகி 5 வயதில் மகள் இருக்கிறார். இவருடைய முதல் திருமணத்தில் என்ன பிரச்சனை? எப்படி விவாகரத்தானது? அவர் யார்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. பின் இவர் இரண்டாவதாக அர்னவை திருமணம் செய்து கொண்டார்.மேலும், திருமணம் ஆகி கொஞ்ச நாட்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பதை திவ்யா அறிவித்து இருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாக திவ்யா பகீர் குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார்.

அதோடு அர்னவிற்கு செல்லம்மா சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அதை கேட்டதற்கு அர்னவ் தன்னை தாக்கியதால் வயிற்றில் அடிபட்டு ரத்தம் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் திவ்யா கூறி இருந்தார்.மேலும், காவல் துறையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி தன் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் அர்னவ் தான் என்றும் திவ்யா புகார் கொடுத்து இருந்தார்.

View this post on Instagram

A post shared by Divya Shridhar (@divya_shridhar_1112)

அதுமட்டும் இல்லாமல் திவ்யா மீதும் அர்னவ் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். இப்படி இருவருமே மாற்றி மாற்றி பேட்டி கொடுத்திருந்தார்கள். இதை தொடர்ந்து திவ்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அர்னவ் மீது வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து போலீஸ் அர்னவை கைது செய்தனர். பின் அர்னவ் ஜாமினில் வெளியில் வந்தார். வெளியில் வந்த பின்னரும் கர்ப்பமாக இருந்த திவ்யாவை அர்னவ் கண்டுகொள்ளவே இல்லை.

மேலும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எல்லாம் சேர்ந்து சமீபத்தில் திவ்யாவிற்கு வளைகாப்பை நடத்தி இருந்தனர். தனக்கு பிறக்கப்போகும் குழந்தை குறித்து பேசிய திவ்யா 'ஏற்கனவே எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அதனால் இது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும். அவனை நல்ல மனிதனாக வளர்ப்பேன். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்றெல்லாம் அவனுக்கு கற்றுக் கொடுப்பேன் என்று கண்ணீர் கூறி இருந்தார்.

View this post on Instagram

A post shared by Divya Shridhar (@divya_shridhar_1112)

இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி திவ்யாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. இப்படி ஒரு நிலையில் தனது மகளின் முதல் பிறந்தநாளை தனியாக கொண்டாடி இருக்கிறார் திவ்யா. தனது மகள் நடக்கும் அழகான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள திவ்யா ' ஒரு வருடம் முன்பு, ஒரு தேவதை பிறந்தாள், இன்று, அவளுடைய முதல் வருடத்தை மகிழ்ச்சியைத் தூவி கொண்டாடுகிறோம்' என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full