என்னை பலிகடா ஆக்க முயற்சிக்கிறார்கள், ஆனால் மக்கள் - எவிக்ஷனுக்கு பின் திவாகர் வெளியிட்ட வீடியோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 43 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், பிரவீன், துஷார் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். மேலும், வைல்ட் கார்ட்டில் நான்கு போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் சென்றிருக்கிறார்கள். சீரியல் நடிகை திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள்.
பிக் பாஸ் 9:
இவர்கள் வீட்டுக்குள் சென்ற உடனே சரவெடியாக வெடித்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பு தொடங்கி இருக்கிறது. கடந்த வாரம் மன்னர் ஆட்சி டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஆறாவது வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. அதில், கனி, திவாகர், சாண்ட்ரா, திவ்யா, பார்வதி, வியானா, fj, அரோரா ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றது. இதில் கனி, சுபிக்ஷா, திவாகர், ரம்யா தான் குறைவான வாக்குகளை பெற்று வந்திந்தார்கள்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
இதில் கடந்த வாரம் கனி வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்க்காத வகையில் திவாகர் தான் வெளியேறினார். பெண்கள் விஷயங்களில் அத்துமீறுதல், ஜாதி ரீதியிலான வார்த்தைகளை பயன்படுத்தியதால் தான் திவாகர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டார் என்று கூறப்படுகிறது. பின் ஏழாவது வாரத்தில் fj தான் கேப்டன் ஆகி இருக்கிறார். ஏழாவது வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது இருக்கிறது. இதில், கனி, சுபிக்ஷா, கெமி, சாண்ட்ரா, திவ்யா, பார்வதி, வியானா, சபரி, விக்ரம், ப்ரஜன், அரோரா, ரம்யா ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=wdsWIUUSXY0
திவாகர் வீடியோ:
இந்நிலையில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு வாட்டர் மிலான் திவாகர் வெளியிட்டிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், என்னை வைத்து பொய்யான குற்றச்சாட்டுகள் எழுதியிருக்கிறார்கள். நான் பொதுவாக சொல்லிய சில கருத்துக்கள் என் மீது அவதூறாக பரப்பப்பட்டிருக்கிறது. ஒருவர் சோசியல் மீடியாவில் வளரும் போது இத்தகைய குற்றச்சாட்டுகள் வருவது சாதாரணம். இந்த பிரச்சனையில் என்னை பலிகடா ஆக்க முயற்சிப்பது சாத்தியமே இல்லை. எனக்கு மக்களுடைய ஆதரவு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்