எல்லோரும் என்னை தான் டார்கெட் பண்ணுறாங்க, உருவகேலி செய்யுறாங்க - புலம்பி தள்ளும் திவாகர்

By subhashini · 7/10/2025

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசன் தொடங்கி 2ம் நாள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், குக் வித் கோமாளி 2 டைட்டில் வின்னர் கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். முதல் நாள் நிகழ்ச்சி அமோகமாக தொடங்கி இருக்கிறது. பின் முதல் நாளே நாமினேஷன் நடைபெற்று இருக்கிறது. இதில் வியானா - 3 ,ஆதிரை - 3 , அப்சரா - 3 , பிரவீன் ராஜ் - 3 , பிரவீன் காந்தி - 4 , திவாகர் - 7, கலையரசன் - 12 ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் போட்டியளராக கலந்து கொண்டிருப்பவர் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்.

பிக் பாஸ் 9:

இவர் நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை போட்டுக் கொண்டுதான் வருகிறார். தான் மக்கள் மத்தியில் பிரபலமாக தெரிய வேண்டும் என்பதற்காக ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் ரூமை கிளீன் செய்யும் போது திவாகர், பிரண்ட்ஸ் பட காமெடி பேசியிருக்கிறார். இதனால் கோபப்பட்ட ரம்யா, யாரை கிண்டல் செய்து பேசுகிறீர்கள்? எதற்கு விமர்சனம் செய்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டிருக்கிறார்.

திவாகர் பற்றி தகவல்:

அதற்கு திவாகர், நான் யாரையும் சொல்லவில்லை என்று சொன்னவுடன் அப்படியே போட்டியாளர்கள் மத்தியில் சண்டை வந்தது. கம்ருதீன், கெமி, ரம்யா, பிரவீன், பார்வதி எல்லோரிடமும் திவாகர் கத்திக்கொண்டு சண்டை போட்டு இருக்கிறார். பின் பிக் பாஸ் கேமராவை பார்த்து திவாகர், இங்கே எல்லாருமே கன்டென்ட்காக ரொம்பவே நடிக்கிறார்கள். ரொம்ப மோசமாக நடந்து கொள்கிறார்கள். என்னை பேசக்கூட விடவில்லை. அவர்கள் பிரபலமாக தெரிவதற்கு என்னை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

திவாகர் புலம்பல்:

நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து பிரவீன், கம்ருதீன், கெமி ரொம்ப மோசமாக நடந்து கொள்கிறார்கள். அவர்களுடைய நடவடிக்கை சரி இல்லை. எனக்கு நடிக்க தெரியாது. என்னுடைய தனிப்பட்ட உரிமையை கூட பேச விட வில்லை. எல்லோரும் என்னை உருவ கேலி செய்கிரார்கள். இது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. நான் ஜாலியாக பேசுவதை கூட சண்டைக்கு வருகிறார்கள் என்றெல்லாம் பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full