ஆசைப்பட்டபடியே பிறந்த குழந்தை - ஓனம் வாரத்தில் முதல் பிறந்தநாளை கொண்டாடிய தியா மேனன்.
சன் மியூசிக் துவங்கப்பட்ட முதன்முதலில் தமிழில் அறிமுகமான வீடியோ தொகுப்பாளர்கள் சிலர் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். அந்த வகையில் 2k கிட்ஸ்களின் பேவரைட் தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்தவர் தியா. முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான ‘சன் டிவி’-யில் 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான காமெடி கேம் ஷோ தான் ‘சூப்பர் சேலஞ்ச்’. இந்த ‘சூப்பர் சேலஞ்ச்’ கேம் ஷோவை தொகுத்து வழங்கியவர் தான் தியா மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து இவர் சன் டிவிலேயே ஒளிபரப்பான இன்னொரு கேம் ஷோ ‘சவாலே சமாளி’ போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். பின் 2016-ஆம் ஆண்டு கார்த்திக் என்ற கிரிக்கெட் வீரரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தொகுப்பாளினி தியா மேனன். திருமணத்திற்கு பின்னர் இவர் சிங்கப்பூரில் செட்டில் ஆகினார். திருமணத்திற்கு பின்னர் டிவி பக்கம் வரமால் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டார் தியா
தியா அளித்த பேட்டி:
இருப்பினும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் தியா அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இறுதியாக பேட்டி ஒன்ரில் பேசிய தியா திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து கேரியரில் கவனம் செலுத்தி விட்டு தான் இருந்தேன். கொரோனா லாக்டவுன் வரையிலும் பிஸியாக ஆங்கரிங்காக பண்ணிட்டு இருந்தேன். பின் என் கணவருடன் சிங்கப்பூரில் இருந்ததால என் யூடியூப் சேனலில் மட்டும் கவனம் செலுத்தி இருந்தேன் என்றும் கூறி இருந்தார்.
அக்கா கொடுத்த சர்பிரைஸ்:
இப்படி ஒரு நிலையில் தான் தியா கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார். அம்மா கையால சாப்பாடு சாப்பிடணும் போல இருந்தது. நானும் என் கணவரும் சிங்கப்பூரில் இருந்ததால நாங்க தான் எல்லாமே பார்த்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது. மூன்றாவது மாதத்தில் அம்மா இங்க வந்திட்டாங்க. அம்மா வந்ததும் எல்லாமே சரியாகிவிட்டது. 5 மாசம் முடிகிற தருணம் அம்மா கூட ஊருக்கு வந்துட்டேன். நான் வீட்டுக்குள் நுழையும் போது என் அக்கா, அக்கா பையன், நண்பர்கள் எல்லோரும் அங்கு இருந்தார்கள்.
ஆசைபட்டபடியே பெண் குழந்தை :
என அக்கா சீரியல் ஆர்ட்டிஸ்ட் என்பதால் அவங்க சென்னையில் இருப்பாங்க. எல்லாம் செம சர்ப்ரைஸ் கொடுத்தாங்க.ஊருக்கு வந்ததும் ஏழாவது மாசம் வளைகாப்பு வைத்துக்கொள்ளலாம் முடிவு பண்ணிட்டோம். நான் பெரிய அளவில் வளைகாப்பு பங்க்ஷன் எல்லாம் அட்டன்ட் பண்ணது இல்லை. அதனால் என் பங்ஷனில் நல்லா என்ஜாய் பண்ணினேன். என் மாமியார் வீட்டில் எல்லா சடங்கும் ஏற்பாடு பண்ணி இருந்தார்கள். மனநிறைவாக வளைகாப்பு விழா இருந்தது.
மகளின் முதல் பிறந்தநாள் :
எனக்கு எந்த குழந்தை பிறந்தாலும் ஓகே தான். ஆனால், என் அக்கா பையன் என்னோட மூத்த பையன் மாதிரி. அவனை என் சொந்த பையனாகத் தான் நினைக்கிறேன். ஒரு பையன் ஒரு பொண்ணு ஆசையில் பெண் குழந்தை பிறந்தால் நன்றாக இருக்கும் என்கிற எண்ணம் அப்பப்ப வரும் என்று கூறி இருந்தார். அவர் ஆசைபட்டபடியே கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. நேற்று அவரின் முதல் பிறந்தநாளை கொண்டாடினர் தியா.