புற்று நோயால் பதிக்கப்பட்ட நடிகர் தவசி - தனது மருத்துவமனையிலேயே அனுமதித்து இலவச சிகிச்சை அளித்து வரும் தி.மு.க எம் எல் ஏ.
புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் தவசிக்கு திருப்பரங்குன்றம் எம் எல் ஏ உதவிக்கரம் நீட்டியுள்ளார். தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரியின் தந்தையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் தவசி. அந்த படத்திற்கு பின்னர் ரஜினிமுருகன், கொம்பன், விசுவாசம் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் கூட துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் தவசி. இவரை பெரும்பாலோருக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாகத்தான் தெரியும்.
https://www.youtube.com/watch?v=VBX36Sm_F6U
ஆனால் கிழக்கு சீமையிலே படம் துவங்கி கடந்த 30 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்து வரும் இவர் எண்ணற்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் நடிகர் தவசி புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். சமீபத்தில் இவரது வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது. அதில் பேசியுள்ள தவசி தான் 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருவதாகவும், தமக்கு இப்படி ஒரு நோய் ஆண்டவன் கொடுப்பான் என்று நினைத்து பார்க்க இல்லை என்றும் கூறி இருக்கிறார் நடிகர் தவசி.
அதேபோல போதிய பணம் இல்லாததால் சிகிச்சைக்கு மிகவும் சிரமப்பட்டு வருவதாக கூறியுள்ள தவசி தனக்கு சக கலைஞர்கள் உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். படங்களில் கடா மீசை கம்பீரமான உடல் என்று மிகவும் கட்டுமஸ்தாக இருந்த தவசி தற்போது புற்றுநோய் பாதிக்கப்பட்ட ஒரே ஆண்டில் எலும்பும் தோலுமாக ஆகியிருக்கிறார். கடந்த ஆண்டு தான் தொலைக்காட்சி தொடர் ஒன்றின் படப்பிடிப்பு முடிந்து காரில் சென்றுகொண்டிருக்கும்போது விபத்தில் சிக்கிய தவசி படுகாயமடைந்த தவசி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பெற்று குணமடைந்தார் என்பது குறிப்படத்தககது.
https://twitter.com/mdr_saravanan/status/1328344384652206081
இப்படி ஒரு நிலையில் நடிகர் தவசியை தனது மருத்துவமனையிலேயே அனுமதித்து இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார் திருப்பரங்குன்றம் எம் எல் ஏ சரவணன். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நகைச்சுவை நடிகர் தவசி அவர்களுக்கு எங்களது மருத்துவமனையில் உணவுக்குழாயில் (Oesophageal stent) பொறுத்தியுள்ளோம். புற்றுநோய் மிகவும் முற்றிய நிலையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அவரின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் எங்களது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்றுக்கொண்டோம்.