பள்ளிக்கூட ஒப்பிப்பு,சினிமா நடிப்பு - விஜய் பேச்சை மறைமுகமாக விமர்சித்த போஸ் வெங்கட்

By subhashini · 28/10/2024

மாநாட்டில் விஜய் பேசிய கருத்தை கிண்டல் அடிக்கும் வகையில் நடிகர் போஸ் வெங்கட் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் விஜய்யின் மாநாடு குறித்த செய்தி தான் அதிகமாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தான் 'தமிழக வெற்றிக் கழகம்' என்னும் தன் கட்சியின் பெயரை விஜய் அறிவித்திருந்தார்.

அதோடு வருகின்ற 2006 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிடுவதாக விஜய் அறிவித்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சில வாரங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் தன் கட்சி கொடியை ஏற்றி உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் பாடி இருந்தார். அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, வி.சாலையில் நேற்று அக்டோபர் 27ஆம் தேதி தனது முதல் அரசியல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார் தலைவர் விஜய்.

தவெக முதல் மாநாடு:

மேலும், மாநாட்டில் முழு அரசியல் தலைவனாக விஜய் பேசியிருந்தது பலரையுமே மெய்மறக்க வைத்தது. அதோடு இந்த மாநாட்டிற்கு இலட்சக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் திரண்டு வந்திருந்தார்கள்.
இதை பார்த்த விஜய் எமோஷனல் ஆகி கண்கலங்கி இருந்தார். அதற்குப்பின் மேடையில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அதற்கு பிறகு கட்சி பாடல் முடிந்தவுடன் விஜய் மேடைக்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருக்கும் ரேம்பில் விஜய் அவர்கள் தொண்டர்களை பார்த்து கையசைத்தப்படி உற்சாகத்துடன் நடந்து இருந்தார்.

போஸ் வெங்கட் பதிவு:

அதேபோல் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விஜய்னுடைய பேச்சும் அனல் பறக்க இருந்தது. மேலும், மாநாட்டில் விஜய் பேசியதற்கு பலருமே பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜய்யின் பேச்சை கிண்டல் செய்யும் வகையில் இயக்குனரும், நடிகரும், திமுகவை சேர்ந்தவரும் ஆன போஸ் வெங்கட் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், 'யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும் .. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்' என்று கூறி இருக்கிறார்.

ரசிகர்கள் ஆதங்கம்:

தற்போது இவரின் பதிவு தான் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதை விஜயின் ரசிகர்கள் கடுமையாக கண்டித்தும், திட்டியும் வருகிறார்கள். அதில், யாரோ ஒரு நடிகரின் விழாவிற்கு அவரைப் பார்க்க வந்த சில ஆயிரம் ரசிகர்கள் முன்பு நின்று ஒரு நாலு வரி பேச நீ எவ்வளவு மனப்பாடம் ஒப்பிப்பு செய்தாய்? அப்போது தன்னை மட்டுமே பார்க்க வந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் ஒரு மணி நேரம் பேச அவர் பல மடங்கு மனப்பாடமும் ஒப்பிப்பும் செய்வதில் எந்த தவறும் இல்லை என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

விழாவில் போஸ் வெங்கட் சொன்னது:

ஏற்கனவே சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா படத்தின் உடைய இசை வெளியீட்டு விழாவில் போஸ் வெங்கட், ஒரு தலைவன் ஐஏஎஸ், போலீஸ், எழுத்தாளர், மருத்துவர் என்று எங்கிருந்தாலும் வரலாம். ஆனால், ஒரு தலைவனுடைய அடிப்படை ரசிகனை முட்டாளாக வைத்திருக்க கூடாது. அவனை அறிவாளியாக்க வேண்டும். அவன படிக்க வைக்கணும், அறிவ வளர்க்கணும். அதற்குப் பிறகுதான் அரசியலுக்கு வரணும் என்று கூறி இருந்தார். இப்படி இவர் பேசியிருந்தது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை தாக்கித் தான் தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full