சினேகனுக்கும் ஆரவ்விற்கும் இன்று குறும் படம் உண்டா ?

By Tamil Selvam · 26/8/2017
சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு குறை இருக்காது. அதற்கு முக்கிய காரணம் கமல் அவர்களின் பங்கேற்பு. இன்றைய முன்னோட்ட வீடியோவில் கமல் பேசுகையில், குற்றங்கள் செய்வோரும் (ஆரவ்) குற்றத்தை மறைப்போரும் (சினேகன்) கை கோர்த்து கொண்டால் நம் கண்ணில் படாமல் போய்விடுமா என்ன என்று பேசுகிறார். சென்ற வாரம் மக்களின் கேள்விகளை புதிய போட்டியாளர்கள் ஏற்கனவே வீட்டில் இருந்த போட்டியாளர்களிடம் கேள்வி கேட்டனர். அதற்கு பெரும்பாலான விடைகள் பொய்யாகவே இருந்தது. சில சமயம் வீடியோவை பாரத்தால் தெரியும் என்று சினேகன் கூறினார். ஆனால் அவ்வாறு விடீயோவை பாரத்தால் நிச்சயம் சினேகன் கூறியது பொய் தான் என்று நிரூபணம் ஆகிவிடும். அதே போல் ஆரவ்விற்கும் பல குறும் படம் போடும் அளவிற்கு சம்பவங்கள் நடந்தேறிவிட்டது. இன்று கமல் குறும்படம் வெளியிட்டால் நிச்சயம் பார்வையாளர்களிடம்  சுவாரசியம் அதிகரிக்கும்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full