எங்க மூனு பேருக்குமே அப்பா இல்லை - டான் படத்தில் அம்மாவாக நடித்த நடிகை உருக்கம்.

By Rajkumar · 19/5/2022

தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் இருக்கிறது. அந்த வகையில் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்.

இவர்களுடன் இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ராதாரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். பாஸ்கரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயன் எதையாவது சாதிக்க வேண்டும் முயற்சியில் இருக்கிறார். அப்போது கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும் எஸ் ஜே சூர்யாவிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் டிகிரி வாங்கினாரா? சாதித்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை.

டான் படம் வசூல்:

மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படம் 30 முதல் 35 கோடி பட்ஜெட்டில் டான் படம் உருவாக்கப்பட்டது. ஆனால், படம் வெளியாகி நாள் நான்கு நாட்களிலேயே 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அது மட்டுமில்லாமல் 100 கோடியை இரண்டாவது வார இறுதியில் எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு கமலின் விக்ரம் படம் வரும் வரை டான் படத்தின் ஓட்டத்திற்கு தடை ஏற்படாது என்றும் கூறப்படுகிறது. குடும்பங்கள் கொண்டாடும் படம் என சொல்வதை விட டான் திரைப்படம் பெற்றோர்கள் பாராட்டும் படமாக மாறியிருக்கிறது.

டான் படம் குறித்த தகவல்:

அப்பா மகனுக்கு வில்லனாக தெரியலாம். ஆனால், அவர் தன் மகனை ஒரு சூப்பர் ஹீரோவாக மாற்றுகிறார் என்ற கதையை டான் படத்தின் மூலம் பல பெற்றோர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார் சிபி சக்கரவர்த்தி. மேலும், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் அம்மாவாக நடித்தவர் நடிகை ஆதிரா பாண்டி லட்சுமி. இவர் இதற்கு முன் பல படங்களில் நடித்து இருக்கிறார். விஷால் நடித்த மருது படத்தில் நாயகியின் அம்மாவாக நடித்து இருந்தார். இந்த நிலையில் டான் படம் குறித்து நடிகை ஆதிரா பாண்டி லட்சுமி பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பது,

நடிகை ஆதிரா பாண்டி லட்சுமி அளித்த பேட்டி:

நான் கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தேன். பின் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மாமியாராக நான் நடித்தேன். டான் படத்தில் அம்மாவாக பிரமோஷன் ஆகிவிட்டேன். படத்தின் கதையை இயக்குனர் சிபிசக்கரவர்த்தி சொல்லும்போதே நான் கண்கலங்கி அழுதுவிட்டேன். எனக்கும் அப்பா இல்லை, சமுத்திரக்கனி சாருக்கும் இல்லை, சிவகார்த்திகேயனுக்கும் அப்பா இல்லை. நாங்கள் மூவருமே அப்பாவை இழந்து தவித்து வாடியிருந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் அந்த காட்சியில் நடிப்பது ரொம்ப கடினமாக இருந்தது இல்லை.

தன் அப்பா குறித்து கூறியது:

அப்படியே அந்த கதையில் நாங்கள் வாழ்ந்து விட்டோம். மேலும், படத்தில் சமுத்திரக்கனியின் கால்கள் மகனுக்காக உழைத்து ஓடாய் தேய்ந்து போய் இருக்கும். அந்த ஒரு காட்சிதான் பலரையும் அந்த படத்தை பாராட்ட வைத்தது. எங்க அப்பாவின் கால்களும் அப்படித்தான் இருக்கும். என்னை ரொம்பவே சிறப்பாக வளர்த்தார் எங்க அப்பா. டான் படத்தில் நடிக்கும்போது ஒவ்வொரு சீனிலும் என் கண்ணுக்கு முன் என் அப்பா வந்து சென்றார் என்று உருக்கமாக கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full