கோலாகலமாய் நடந்து முடிந்த சிவகார்த்திகேயன் பட இயக்குனரின் திருமணம்- வைரலாகும் புகைப்படங்கள் இதோ

By Rajkumar · 6/9/2024

'டான்' பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியின் திருமண புகைப்படங்கள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகவும் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கிய படம் 'டான்'.

இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன் இணைந்து தயாரித்து இருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். நடிகர் சிவகார்த்திகேயனுடன் இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, ராதாரவி உட்பட பலர் நடித்திருந்தார்கள். பாஸ்கரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருந்தார். குறிப்பாக படத்தில் கண்டிப்பான தந்தையாக சமுத்திரக்கனி நடித்திருந்தார்.

டான் படம்:

இதனால் சிவகார்த்திகேயனை அதிகமாக திட்டும் தந்தையாக சமுத்திரக்கனி இருப்பார். ஆனால், எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் முயற்சிப்பார். அப்போது கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும் எஸ்.ஜே.சூர்யாவிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் டிகிரி வாங்கினாரா? தன் தந்தையின் எண்ணத்தை முறியடித்தாரா? என்பதுதான் படத்தின் மீதி கதை. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.

View this post on Instagram

A post shared by Cibi Chakaravarthi (@dir_cibi)

சிபி சக்கரவர்த்தி:

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தான் இயக்கிய முதல் படத்திலேயே வெற்றியை கண்டவர். இவர் அட்லீயின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். தற்போது வரை சிவகார்த்திகேயன் கேரியரில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் என்றால் அது டான் படம் தான். இந்த படத்திற்காக இவர் சிறந்த அறிமுக இயக்குனருக்கான EDISON விருதும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதற்குப் பிறகு இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கு பெரியதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சிபி சக்கரவர்த்தி திருமணம்:

தற்போது இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கு திருமணம் நடந்திருக்கும் விஷயம்தான் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு சிபி சக்கரவர்த்தி, நடிகர் சிவகார்த்திகேயன் உட்பட தன்னுடைய நண்பர்கள் சில பேருக்கு பேச்சுலர் பார்ட்டி வைத்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் கூட தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் சிபி சக்கரவர்த்திக்கு தற்போது வர்ஷினி என்பவரிடம் திருமணம் நடைபெற்றுள்ளது.

View this post on Instagram

A post shared by Cibi Chakaravarthi (@dir_cibi)

மீண்டும் இணையும் சிவா- சிபி:

மேலும் இத்திருமணத்திற்கு சிவகார்த்திகேயன், எஸ். ஜே.சூர்யா, பாலா சரவணன், இயக்குனர் அட்லி, இயக்குனர் ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தியுள்ளனர்‌. 'டான்' திரைப்படத்தைத் தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து மீண்டும் படம் பண்ணுவதாக சமூக வலைத்தளப் பக்கங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், அந்த விஷயம் உண்மைதானாம். இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full