மார்க் ஆண்டனி ட்ரைலரில் வரும் இவங்க அந்த டீச்சரா ? ஏற்கனவே sj சூர்யாவுடன் நடித்துள்ளார் பாருங்க.

By Rajkumar · 10/9/2023

மார்க் ஆண்டனி படத்தில் வரும் நடிகை குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். ஆரம்பத்தில் இவர் துணை இயக்குனராக தான் பணியாற்றினார். அப்படியே இவர் படங்களில் ஒரு சில காட்சியில் நடித்தும் இருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Sun Music (@sunmusic_offl)

பின் இவர் இயக்கிய வாலி படம் மூலம் தான் இயக்குனராக சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். தனது முதல் படத்திலேயே எஸ் ஜே சூர்யா மாபெரும் நடிகரை வைத்து சூப்பர் டுபர் ஹிட்டை அளித்தார். அதன் பின் விஜய்யின் குஷி படத்தையும் எஸ் ஜே சூர்யா தான் இயக்கி இருந்தார். இப்படி தமிழ் சினிமாவின் இரு முன்னணி நடிகர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக எஸ் ஜே சூர்யாவின் படம் அமைந்திருந்தது.

எஸ் ஜே சூர்யாவின் திரைப்பயணம்:

அதற்கு பிறகு இவர் நியூ, அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி போன்ற பல படங்களை நடித்தும், தயாரித்தும் இருக்கிறார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ் ஜே சூர்யா அவர்கள் இசை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படத்திலும், விஜயின் மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். அதிலும், இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து இருந்தார். இந்த இரு படங்களும் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்து இருந்தது.

எஸ் ஜே சூர்யா நடித்த படங்கள்:

கடைசியாக எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பொம்மை. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. தற்போது இவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்து இருக்கிறார்.இப்படத்தை எஸ்.வினோத் குமார் தயாரித்து இருக்கிறார். ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் விஷால், செல்வராகவன் நடித்து இருக்கிறார்கள்.

மார்க் ஆண்டனி படம்:

தற்போது இந்த படத்தினுடைய ரிலீசுக்கான வேலையில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த படக்குழு செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் வெளியானது. இந்த நிலையில் இந்த ட்ரைலரை விமர்சித்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு விடுகிறார்கள். அதாவது, கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்திருந்த டான் படத்தில் எஸ் ஜே சூர்யா அவர்கள் பேராசிரியராக நடித்திருப்பார்.

ஸ்வேதா மிஸ்- எஸ் ஜே சூர்யா காம்போ:

அந்த படத்தில் அவரையும் ஸ்வேதா மிஸ்சையும் இணைத்து மாணவர்கள் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்கள். தற்போது அதே ஸ்வேதா மிஸ் தான் மார்க் ஆண்டனி படத்திலும் எஸ் ஜே சூர்யாவுடன் நடித்திருக்கிறார். ட்ரெய்லரில் எஸ் ஜே சூர்யாவுடன் ஸ்வேதா மிஸ் இருக்கும் ஒரு காட்சியை எடுத்தும், டான் படத்தின் காட்சியையும் இணைத்து சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகிறார்கள். தற்போது ஸ்வேதா மிஸ்- எஸ் ஜே சூர்யா காம்போ தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full