ராமதாஸ் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் தமிழ் பிக் பாஸ் டைட்டில் வின்னர் - யார் தெரியுமா?

By subhashini · 25/7/2025

தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் சேரன். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் இருந்தார். அதிலும் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டு இருந்தது.

அதோடு சேரன் இயக்கிய பல படங்கள் தேசிய விருதுகளை வாங்கி இருந்தது. பின் இடையில் சில காலம் சேரன் படம் இயக்குவதில் இருந்து விலகி இருந்தார். பின் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சேரன் படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில் கடைசியாக இவர் 2019 ஆம் ஆண்டு வெளியான திருமணம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இதனை அடுத்து கடந்த நான்கு ஆண்டுகளாக சேரன் எந்த படத்தையும் இயக்கவில்லை நடித்து மட்டும் வந்தார்.

சேரன் திரைப்பயணம்:

மேலும், சிறிய இடைவெளிக்கு பிறகு சேரன் இயக்கத்தில் வெளியாகி இருந்த பயணம் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அதன் பின் இவர் கன்னட நடிகர் கிச்சா சுதிப்பை வைத்து புதிய படத்தை இயக்கி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சேரன் இயக்கத்தில் படம் வெளியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதை அடுத்து சேரன் வெப் தொடர் ஒன்றை இயக்கிக் கொண்டு பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் நடிகர் சேரன் அவர்கள் மலையாளத்தில் நடித்திருக்கும் வெளிவந்த நரிவேட்டை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

ராமதாஸின் வாழ்க்கை வரலாறு:

தற்போது சேரனின் ஆட்டோகிராப் படம் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டு நவீன தொழில்நுட்பத்துடன் வெளிவர இருக்கிறது. இதை அடுத்து சேரன் அவர்கள் பாமக நிறுவனரும், தலைவருமான மருத்துவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கிறார். இது தொடர்பாக சேரன் பதிவு போட்டு இருந்தார். இந்த படம் மூன்று பாகங்களாக கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள். முதல் பாகத்தில் ராமதாஸ் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, மருத்துவம், ஏழை மக்களுக்கு சேவை செய்யும் விதம், சொந்தமாக கிளினிக் ஒன்றை தொடங்கி இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் எனக்கு குறைந்த கட்டணத்தில் ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்தது காணப்படும்.

படம் பற்றிய தகவல்:

ராமதாஸ் தன்னைச் சார்ந்த வன்னியர் சமூகத்தின் பின்தங்கிய நிலையை பற்றி சிந்தித்து தொடங்கியதுடன் ஏழ்மை நிலையை அகற்றி கல்வி வேலைவாய்ப்பு பொருளாதாரத்தில் முன்னேற்றம் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கட்சியை ஆரம்பித்தார். இரண்டாம் பாகத்தில் மற்ற சுவாரசியங்கள் எல்லாம் வருகிறது. இந்த படத்தினுடைய படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த அப்டேட் தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

படத்தின் ஹீரோ:

அதாவது, இந்த படத்தை ஜிகே தமிழ் குமரன் என்பவர் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஏகாம்பரம் என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் ராமதாஸாக பிக் பாஸ் பிரபலமும் நடிகருமான ஆரி நடிக்கிறார்.
தற்போது அவரை வைத்து எடுக்கப்பட்ட போஸ்டர்கள் தான் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது.
அதோடு இன்று ராமதாஸின் பிறந்த நாளும் என்பதால் அந்த போஸ்டர், படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது . மேலும், படத்தினுடைய படத்திற்கு அய்யா என பெயரிடப்பட்டிருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full