Beast படத்தை Familyயோட பார்த்தேன், பாட்டு மியூசிக் எல்லாம் ஓகே, ஆனா படம் - அஜித் ரசிகர் மோகன் ஜி போட்ட பதிவு படு வைரல்.

By Rajkumar · 14/4/2022

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ்,யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இது நெல்சன் திலீப் குமாரின் மூன்றாவது திரைப்படம் ஆகும். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார்.

ரசிகர்களின் பெருத்து எதிர்பார்ப்புடன் நேற்று இந்த படம் வெளியாகி இருந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவு படம் இல்லை. இந்த படத்தை பார்த்துவிட்டு பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் மோகன் 'EAவில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பீஸ்ட் படம் பாத்தேன். அரபிக் குத்து பாடலும், மியூசிக்கும் வேற லெவல். கிளைமாக்ஸ் சாங் விஷ்வல்ஸ் கூட செம. படம் என்று குறிப்பிட்டு வாயில் மாஸ்க்குடன் இருக்கும் எமோஜி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மோகன் போட்ட பதிவு :

இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. பீஸ்ட் படத்தில் வீரராகவன் கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருக்கிறார். இவர் தன்னுடைய அசால்ட்டான நடிப்பு, டயலாக் டெலிவரி, டான்ஸ், ஆக்சன் காட்சிகள் என ஒட்டு மொத்தமாக ஸ்கோர் செய்து இருக்கிறார். சொல்லப்போனால் மொத்த படத்தையும் விஜய் தான் தாங்கி நிற்கிறார்.படத்தில் தீவிரவாதிகளை ரொம்பவே வீக்காக காண்பித்துள்ளார்கள்.

பீஸ்ட் கதை :

இதனால் விஜய் போடும் திட்டங்களை பார்க்கும் நமக்கு படத்தின் மீது விறுவிறுப்பு குறைந்து விடுகிறது. முதல் பாதி காமெடி, ஆக்சன் என நெல்சன் ஸ்டைலில் கொண்டு சென்றாலும் இரண்டாம் பாதி ரசிகர்களுக்கு சலிப்பு தட்டும் வகையில் உள்ளது. கோகோ, டாக்டர் உள்ளிட்ட படங்களைத் இயக்கிய நெல்சன் பீஸ்ட் படத்தில் புது மாற்றத்தை காண்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.

ரசிகர்கள் ஏமாற்றம் :

இதுவரை வெளிவந்த விஜய் படங்களில் பீஸ்ட் படம் வித்தியாசமாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கைக்கொடுக்கவில்லை என்றே சொல்லலாம்.பல எதிர்பார்ப்புகளுடன் இருந்த விஜய் ரசிகர்களுக்கு பீஸ்ட் படம் ரொம்ப சுமார் தான். கோகோ, டாக்டர் போன்ற இரண்டு படங்களிலும் கடத்தல் கான்செப்ட்டை கையாண்ட நெல்சன் இந்தப்படத்திலும் கடத்தல் கான்செப்டை கையாண்டிருப்பது கைகொடுக்கவில்லை.

விஜய் ரசிகர்கள் அதிருப்தி :

மொத்தம் பிளாப் தான் ஆகிவிட்டது. பல வருடங்களுக்கு முன்பு படங்களில் வந்த கடத்தல், தீவிரவாதம் என எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வராமல் அப்படியே அரைத்த மாவை அரைத்து இருக்கிறார் நெல்சன். படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை போதும்டா சாமி என்று சொல்லுமளவிற்கு ரசிகர்களுக்கு சலிப்பு தட்டி இருக்கிறது. இந்த கதையில் விஜய் நடிக்க எப்படி சம்மதித்தார் என்று பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full