பல வன்னிய படைப்பாளிகள் இனி வெல்ல தான் போகிறார்கள். கடுப்பில் திரௌபதி இயக்குனர் போட்ட ட்வீட்.

By Rajkumar · 5/3/2020

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில்கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது இருப்பினும் இந்த படம் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்துள்ளார். அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதன் பின்னர் கிரிவலம் நாளை யுகா தமிழகம் பெண் சிங்கம் போன்ற பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் என்னதான் அஜித்தின் மைத்துனர் ஆக இருந்தாலும் இவருக்கு சினிமாவில் ஒரு நிலையான அங்கீகாரம் கிடைக்கவில்லை இறுதியாக 2016 ஆம் ஆண்டு வெளியான அந்தமான் என்ற படத்தில் நடித்திருந்தார் அதன்பின்னர் இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.தற்போது நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் திரௌபதி படத்தின் மூலம் ஒரு மாஸ் என்ட்ரியில் மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்கியிருக்கிறார்.

இந்த படம் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாகி உள்ளது. மேலும், பதிவு திருமண ஊழல்களை சுட்டி காட்டியுள்ளார்கள். சமூகத்தில் நிலவும் ஜாதி கொடுமைகளையும், சாதிவெறியர்களையும், ஜாதியால் நடக்கும் ஆவணக் கொலைகளையும், பாதிக்கப்பட்டோரின் அவலங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் திரௌபதி. இந்த படம் பெரிய அளவு பட்ஜெட் இல்லை என்றாலும் வசூலில் படத்தின் பட்ஜெட்டை முந்தியது. இந்த படம் குடும்ப பெண்களின் ஆதரவையும் பெற்று வருகின்றது.

https://twitter.com/mohandreamer/status/1235412159611301890

இந்த நிலையில் இந்த படத்திற்கு குறைவான மதிப்பேன் வழங்கிய பிரபல பத்திரிகைக்கு திரௌபதி பட இயக்குனர் மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். அதில், இது என் படத்திற்கான மார்க் இல்லை.. என் சமூகத்தில் இருந்து நான் வெற்றியாளராக வெளிவந்ததை தாங்க முடியாத வலி.. இது ஆரம்பம் தான்.. பல வன்னிய படைப்பாளிகள் இனி வெல்ல தான் போகிறார்கள்.. இப்படியே குப்புற படுத்து புலம்ப வேண்டியது தான் நீங்க.. உங்கள் விமர்சனத்திற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full