இதே ஒரு வன்னியர் பேசி இருந்தால் - திரௌபதி இயக்குனர் மோகன் சரமாரி கேள்வி. வீடியோ இதோ.

By Rajkumar · 15/5/2020

அண்மையில் தலைமைச் செயலாளரைச் சந்திக்கச் சென்ற திமுக எம்.பி.க்கள் தலைமைச் செயலாளர் தங்களை அவமரியாதை செய்துவிட்டதாக குற்றம்சாட்டினார்கள். அந்தக் குழுவில் இருந்த தயாநிதி மாறன் எம்.பி., தலைமைச் செயலாளர் தங்களிடம் நடந்து கொண்ட விதம் குறித்துப் பேசுகையில், “நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா?” என்று ஆவேசமாக பேசி இருந்தார். தயாநிதி மாறனின இந்த பேச்சு பட்டியல் இனத் தலைவர்கள் மத்தியில் கடும் சர்ச்சை குரல்களை எழுப்பி வருகிறது.

https://twitter.com/thirumaofficial/status/1260953166721548292

இதுகுறித்து திமுக கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் திருமாவளவன் ட்வீட் ஒன்றை செய்திருந்தார். அதில் '‘தலைமைச் செயலாளர் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது சரி. ஆனால், அந்த வேகத்தில் 'நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா' என்றது அதிர்ச்சியளிக்கிறது. அதில் உள்நோக்கமில்லை, என்றாலும் இம்மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தைப் பாதித்திருக்கிறது. இது தோழமை சுட்டுதல்’ என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் சொல்லும் விதமாக, தயாநிதி மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், திமுக எம்.பி.க்களைத் தலைமைச் செயலாளர் தாழ்வான முறையில் நடத்தினார் என்ற அர்த்தத்தில்தான் அப்படிக் கூறியிருந்தேனே தவிர எவரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை’ என்று பதிவிட்டிருந்தார். இந்த பிரச்சனை படு விவாதமாக போய்க்கொண்டு இருக்க திரௌபதி பட இயக்குனர் மோகன் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.

https://twitter.com/mohandreamer/status/1261196215154343937

மோகன் இயக்கிய திரௌபதி படத்தில் தலித் சமூககத்தினரை குறிப்பிட்டு பேசி இருந்தார் என்ற சர்ச்சை தற்போது நிலவி வருகிறது. இந்த நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட மோகன் 'என் படத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுத்ததற்கே எத்தனை பேர் என்னை கேள்வி கேட்டீர்கள். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதற்கு யாரவது கேள்வி கேட்டீர்களா? இதே மற்ற இனத்தார் பேசி இருந்தால் சும்மாவிட்டு இருப்பீர்கள் என்று திருமாவளவனை மறைமுகமாக சாடியுள்ளார் மோகன்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full