திரௌபதி இயக்குனரின் அடுத்த படைப்பு - தேசிய விருது பெற்ற நடிகரை தட்டி தூக்கிய மோகன்.

By Rajkumar · 21/12/2020

திரௌபதி பட புகழ் ஜி மோகன் இயக்க இருக்கும் 'ருத்ர தாண்டவம்' படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் கமிட் ஆகி இருக்கிறார். பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில்கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது . பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது இருப்பினும் இந்த படம் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்து இருந்தது. இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்து இருந்தார். அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

https://twitter.com/mohandreamer/status/1340871939812835328

அதன் பின்னர் கிரிவலம் நாளை யுகா தமிழகம் பெண் சிங்கம் போன்ற பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் என்னதான் அஜித்தின் மைத்துனர் ஆக இருந்தாலும் இவருக்கு சினிமாவில் ஒரு நிலையான அங்கீகாரம் கிடைக்கவில்லை இறுதியாக 2016 ஆம் ஆண்டு வெளியான அந்தமான் என்ற படத்தில் நடித்திருந்தார் அதன்பின்னர் இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. பின்னர் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் திரௌபதி படத்தின் மூலம் ஒரு மாஸ் என்ட்ரியில் மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்கி இருந்தார்.

திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து மீண்டும் ஒரு படத்தை எடுக்க இருக்கிறார் மோகன். அந்த படத்திற்கு 'ருத்ர தாண்டவம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இருந்தது. இதற்கு பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். விரைவில் இந்த படத்தில் நடிக்க உள்ள பிரபலங்களின் பெயர்களை அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார் மோகன்.

https://twitter.com/mohandreamer/status/1320244306507042816

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமைய்யா முக்கிய கதாபாத்திரத்தில் கமிட் ஆகி இருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோகன், மதிப்பிற்குரிய தம்பி இராமையா அண்ணன் #ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன். ஏற்கனவே இந்த படத்தில் சீரியல் தர்ஷா குத்பா கமிட் ஆகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full