'ஜாதி மதம் பார்க்காம கல்யாணம் பண்ணி வெச்சேன்.ஆனா, அவன்' - திரௌபதி படத்தின் சில நிமிட காட்சிகள்.

By Rajkumar · 24/2/2020

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய இயக்குனர் மோகன் இயக்கத்தில் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் நடித்துள்ள திரௌபதி திரைப்படம் தமிழ் சினிமாவில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ரிச்சர்ட் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கருனாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, லீனா, சேஷு, ஆறு பாலா, ஜீவா ரவி, இளங்கோ, கோபிநாத், சுப்ரமணி உட்பட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் தான் வெளி வந்தது.

https://www.youtube.com/watch?v=HOI0Anwka9U

இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியானவுடன் சோசியல் மீடியாவில் மூன்று நாட்களுக்கு மேலாக டாப் 5 ட்ரெண்டிங்கில் இது தான் இருந்தது. அது மட்டும் இல்லாமல் பலரும் இந்த படத்தின் ட்ரைலரை பார்த்து பாராட்டி தங்களுடைய கருத்துகளை பதிவு செய்தார்கள். ஆனால், இந்த படத்தின் டிரெய்லரில் ஜாதி ஆவணக் கொலைகளை ஆதரிக்கும் வகையில் வசனங்களும், காட்சிகளும் இடம் பெற்று உள்ளது என்று கூறி இந்த படத்தை வெளியிட தடை கூறி பல பிரச்சனைகளை செய்து வருகிறார்கள்.

இதையும் பாருங்க : மகள் மீதான புர்கா குறித்த விமர்சனத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில். எப்படி தான் இப்படி எல்லாம் பதில் சொல்றாரோ.

இருந்தாலும் இந்த படத்தின் ட்ரெய்லர் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் சுமார் 4 மில்லியன் வியூஸ் மேல் கடந்து உள்ளது. இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் அஜித்துடன் இயக்குனர் மோகன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. இதனால் இந்த படத்தினை அஜித் ஆதரிக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால், இந்த படத்தின் இயக்குனர் மோகன் அவர்கள் கூறியது, இது எல்லாம் வதந்தி. இதை நம்பாதீர்கள். இது பல வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் கூறி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=lMJBEoWOvdQ

இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பல நாட்கள் ஆனாலும் தற்போது வரை இந்த படம் குறித்த தாக்கம் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து இருந்து கொண்டே வந்தது இதனால் இந்த படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர் இந்த நிலையில் இந்த படம் வரும் 28ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சென்டிமென்ட் காட்சியின் ஸ்னீக் பீக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தந்தை ஒருவர் தனது மகள் ஜாதி மதம் பார்க்காமல் திருமணம் செய்து கொடுத்து பின் பட்ட கஷ்டத்தை குறித்து பேசியுள்ளார். இப்படி முதல் வீடியோவிலேயே நாடக காதல் குறித்து பேசி திரௌபதி இயக்குனர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full