குட்டை உடையில் ஜார்ஜ் குட்டியின் இரண்டு மகள்கள் கொடுத்த போஸ் - வைரல் புகைப்படம்.

By Rajkumar · 25/2/2021

மலையாள சினிமாவுலகில் மிக பிரபல இயக்குனரான ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த திரிஷ்யம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் மோகன்லால், மீனா, பேபி எஸ்தர் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் நல்ல வசூலையும், விமர்சனத்தையும் பெற்றுத் தந்தது. இந்த படத்தை கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி என 4 மொழிகளிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.முதல் பாகம் முடிந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ‘திரிஷ்யம் 2’ படம் உருவாகியுள்ளது. படத்திலும் அதே 6 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் நடக்கும் கதையுடன் தான் துவங்குகிறது இந்த படம்.

சாதாரண கேபிள் ஆபரேட்டராக இருந்த மோகன்லால், இப்போது ஒரு தியேட்டர் உரிமையாளராக இருக்கிறார். தான் எழுதி வைத்திருக்கும் ஒரு கதையைப் படமாகத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.இவர்களின் மூத்த மகள் அன்ஸிபா, முன்பு நடந்த கொலை சம்பவத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார். மோகன்லாலின் வளர்ச்சியால் பொறாமையில் இருக்கும் சிலர் கொலையை அவர்தான் செய்ததாகவே நம்புகின்றனர். இந்நிலையில், மோகன்லாலை மீண்டும் சிக்கவைக்க காத்திருக்கும் போலீஸுக்கு ஒரு துப்பு கிடைக்கிறது.

இதனால் மீண்டும் சிக்கலில் மாட்டுகிறார் மோகன்லால்.இறுதியில் போலீசிடம் மோகன்லால் சிக்கினாரா? போலீஸ் விசாரணையை மோகன்லால் எப்படி எதிர்கொண்டனர்? இறுதியில் மோகன் லால் குடும்பம் தப்பித்ததா இல்லையா என்பது தான் கதை. முதல் பாகத்தை போலவே திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்திலும் மோகன் லால் மகள்களாக இருவர் நடித்து இருந்தனர்.

இதில் எஸ்தர் அணில், தமிழில் பாபநாசம் படத்தில் கூட கமலின் மகளாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திரிஷ்யம் படத்தில் மூத்த மகளாக நடித்தவரின் பெயர், அன்ஷிபா ஹாசன். இவர், மலையாளத்தில் பல்வேறு தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் திரிஷ்யம் படத்தில் ஜார்ஜ் குட்டியின் மகள்களாக நடித்த இவர்கள் இருவரும் குட்டை உடையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full