சிக்கன் வேண்டும், சிகெரட் வேண்டும் - சிறையில் அடம் பிடித்துள்ள நிக்கி கல்ராணியின் சகோதரி.

By Rajkumar · 20/9/2020

கடந்த சில தினங்களாக கன்னட திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல கன்னட நடிகையும் பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியுமான நடிகை சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூருவில் தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி. போதை மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட மூன்று பேரில் ஒருவர் கன்னட சீரியல் நடிகையான அனிகா என்பது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏராளமான போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும்,போதை பொருட்களை கன்னட சினிமாவில் உள்ள நடிகர் நடிகைகள் கூட பயன்படுத்தியதாகவும் கன்னட பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். மேலும் போதை பொருள் பயன்படுத்தும் 15 நடிகர் நடிகைகளில் பெயரையும் அவர் போலீசாரிடம் கொடுத்தார். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தீவிரபடுத்தினர்.

இந்த விசாரணையில் கன்னட நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டதை அடுத்து பிரபல நடிகையான நிக்கி கல்ராணியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும் சஞ்சனா கல்ராணி, தனக்கு சிக்கன் வேண்டும், சிகரெட் வேண்டும் என்று சிறை காவலர்களிடம் அடம் பிடித்து உள்ளாராம். தற்கும் அதிகாரிகள் மறுத்து விட்டனர். 

கடந்த வியாழக்கிழமை இரவு தனக்கு கோழி இறைச்சி வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் கேட்டு சஞ்சனா அடம்பிடித்து உள்ளார். ஆனால் வாரத்திற்கு ஒருநாள் தான் சிறையில் அசைவ உணவு வழங்குவோம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், கோழி இறைச்சி வாங்கி தராவிட்டால் கூட பரவாயில்லை, சிகரெட் மட்டுமாவது வாங்கி கொடுங்கள் என்று சஞ்சனா கேட்டு உள்ளாராம். அதற்கும் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து உள்ளனர்,

Tamil Behind Talkies AMP · Quick view
View full