தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டிஎஸ்பி. இயக்குனர் பொன் ராமன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் அனு கீர்த்தி, குக் வித் கோமாளி புகழ், இளவரசு, ஞானசம்பந்தன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இமான் இசையமைத்து இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கும் டிஎஸ்பி படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி அடைந்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

வாஸ்கோடகாமா என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். படத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் வில்லன் பல அராஜகங்கள் செய்து கொண்டிருக்கின்றார். பல ஆண்டுகளாகவே அந்த ஊரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அந்த வில்லனை அளித்து ஊரை காப்பாற்றும் ஹீரோவாக விஜய் சேதுபதி வருகிறார். வழக்கமான ஆக்சன் கதையைத்தான் இந்த படத்திலும் கையாண்டு இருக்கிறார் இயக்குனர்.

Advertisement

ஏற்கனவே சேதுபதி படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் வந்த விஜய் சேதுபதி இந்த படத்திலும் போலீஸ் அதிகாரியாக வந்திருக்கிறார். வழக்கமான திரை கதையாக இருந்தாலும் வில்லனை எப்படி ஹீரோ கொன்றார். அதில் வரும் டீவ்ஸ்ட் என்ன என்பது தான் படத்தின் கதை. விஜய் சேதுபதி நடிப்பு பாராட்டு. மிரட்டல், சண்டை காட்சிகளில் அசத்தி இருக்கிறார். மற்றபடி சொல்லி கொள்ளும் அளவிற்கு படத்தில் ஒன்றும் இல்லை.

ஆரம்பத்தில் இருந்தே இறுதிவரை படம் சலிப்பைத் தட்டி இருக்கிறது. சென்டிமென்ட், காமெடி எல்லாம் படத்திற்கு சுத்தமாகவே ஒட்டவில்லை. பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமே தவிர மற்றபடி படத்தில் எந்த ஒரு பிளஸ் இல்லை. பல எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு டிஎஸ்பி ஒரு மிகப்பெரிய ஏமாற்றம்தான்.

Advertisement

வழக்கமான போலீஸ்கதையாக இருந்தாலும் கதைக்களத்தில் இயக்குனர் அதிகம் கவனம் செலுத்தி இருக்கலாம். சேதுபதி படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்க்கு இந்த படத்தில் ஒன்றுமில்லை. மொத்தத்தில் காசு கொடுத்து சென்ற ரசிகர்களுக்கு இந்த படம் படு மொக்கை தான்.

Advertisement

நிறை:

நடிகை விஜய் சேதுபதியின் நடிப்பு.

மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பாஸிட்டிவ் விஷயங்கள் இல்லை.

குறை:

பாடல்கள் செட் ஆகவில்லை.

அரைத்த மாவையே இயக்குனர் அரைத்து வைத்து இருக்கிறார்.

சென்டிமென்ட், காமெடி எதுவுமே படத்திற்கு செட் ஆகவில்லை.

திரைக்கதையில் இயக்குனர் அதிகம் கவனம் செலுத்திருக்க வேண்டும்.

ஆரம்பத்திலிருந்து இறுதிவரை பார்வையாளர்கள் மத்தியில் படம் சலிப்பைத் தட்டி இருக்கிறது.

மொத்தத்தில் டிஎஸ்பி படம்- மொக்க என்றுதான் சொல்லணும்

Advertisement