ரஜினி வீட்டிற்கு விசிட் அடித்த துர்கா ஸ்டாலின், விஜய் தாயார் ஷோபா, ஓபிஎஸ், தமிழிசை சவுந்தரராஜன் - என்ன காரணம் தெரியுமா ?

By subhashini · 25/10/2023

ரஜினிகாந்த் வீட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் மனைவி முதல் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் வந்திருக்கும் புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் மிகப் பிரபலமாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று நவராத்திரி விழா. சில தினங்களுக்கு முன் தான் ஆயுத பூஜை, விஜயதசமி சிறப்பாக கொண்டாடப்பட்டு முடிவடைந்தது.

https://www.youtube.com/watch?v=DtcTxBd9pH0

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் பல கட்சியின் அரசியல் பிரமுகர்கள் சந்தித்து இருக்கும் புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ரஜினிகாந்த் அவர்கள் ஆண்டுதோறும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தன்னுடைய வீட்டில் கோலாகலமாக கொண்டாடுவார். அந்த வகையில் இந்த ஆண்டும் நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் நவராத்திரி கொண்டாட்டங்கள் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த விழாவை ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தான் ஏற்பாடு செய்திருந்தார்.

ரஜினி வீட்டுக்கு வந்த விவிஐபிக்கள்:

மேலும், இந்த விழாவிற்கு ஏராளமான விவிஐபிக்கள் வந்திருந்தார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டு முதல்வர் மு க ஸ்டாலின் மனைவி துர்கா, முதல்வர் ஸ்டாலின் சகோதரி செல்வி, நடிகர் விஜய்யின் அம்மா சோபா சந்திரசேகர், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் தன்னுடைய மனைவி உடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Polimer News (@polimernews)

வைரலாகும் புகைப்படம்:

இவர்களுடன் திரை பிரபலங்கள் பலரும் கலந்து இருக்கிறார்கள். இப்படி ரஜினிகாந்த் வீட்டில் ஒட்டுமொத்த அரசியல் கட்சி பிரமுகர்களும், திரைப்பிரபலங்களும் ஒன்று திரண்டு நவராத்திரி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி இருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கோலிவுட்டில் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த்.

ஜெயிலர் படம்:

இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த படம் ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் உலக அளவில் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்திருந்தது. இதை அடுத்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார்.

ரஜினி நடிக்கும் படங்கள்:

தற்போது அந்த படத்தில் ரஜினிகாந்த் உடைய காட்சிகள் எல்லாம் எடுக்கப்பட்டு விட்டது. இதனை அடுத்து ரஜினி 170வது படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை லைகா தயாரிக்கிறது. தற்போது படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதற்கு பின் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 படத்தை லோகேஷ் இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full