தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலினின் மூத்த சகோதரி சாருமதி இன்று காலமாகி இருக்கிறார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரவி வைரலாகி வருகிறது. முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களுக்கு ஜெயந்தி, சாருமதி என்ற இரண்டு சகோதரிகளும், ராஜமூர்த்தி என்ற ஒரு சகோதரரும் உள்ளார். இதில் சாருமதி சென்னையில் வசித்து வந்தார்.

துர்கா ஸ்டாலின்

சகோதரிகள் மீது அளவு கடந்த பாசம் :

தன்னுடைய தாயை சிறுவயதிலேயே இழந்ததால் சகோதரிகள் ஒருவருக்கு ஒருவர் பாசமாக இருப்பார்கள். துர்கா ஸ்டாலின் அதீத கடவுள் பக்தி கொண்டவர். எனவே வெளியூர்கள் உள்ள பிரதிஸ்தி பெற்ற ஊர்களுக்கு செல்லும் போது எப்போதுமே தன்னுடைய இரண்டு சகோதரிகளில் ஒருவரையாவது கண்டிப்பாக அழைத்து கொண்டுதான் செல்வார். அந்த அளவிற்கு அளவு கடந்த பாசத்தை தன்னுடைய சகோதரிகளின் மேலே வைத்திருந்தார்.

Advertisement

துர்கா ஸ்டாலின் சகோதரி சாருமதி கோவையில் திருமணம் செய்து கொண்டாலும் சென்னைக்கு குடிபெயர்ந்து வந்துவிட்டார். கடந்த சில வருடங்களாக சென்னையில் தான் வாழ்ந்து வந்தார் சாருமதி. மேலும் இவரது கணவரும் தொழிலதிபராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னால் உடல்நிலை குறைவு காரணமாக சென்னை அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சாருமதி.

Advertisement
சாருமதி

இப்படி சிகிச்சை பெற்று வந்தவர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். இவருக்கு தற்போது 62 வயதாகிறது என்பது குறிப்பிடதக்கது. இவரது மறைவு துர்கா ஸ்டாலினிற்கும் அவரது குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மறைந்த சாருமதி அவர்களின் உடல் சென்னை எழும்பூரில் உள்ள காசாமேஜர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.கா. ஸ்டாலில் இன்று காலை நேரில் சென்று மலர் வலயம் வைத்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் ஸ்டாலின். மேலும் தன்னுடைய சகோதரி மறைவுக்கு கதறி அழுத்த துர்கா ஸ்டாலினை அங்கு வந்த உதயநிதி சமாதனப்படுத்தி அழைத்து சென்றார். இப்படி பட்ட நிலையில் சாருமதி அவர்களின் உடல் இன்று மாலை இறுதிச்சடங்குகள் நடைபெற்று உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது என்ற தகவல் கிடைத்துள்ளது. அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடலுக்கு பலரும் திமுக நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement