தெலுங்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தைத் தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை ஈ4 தயாரிப்பு நிறுவனம் வாங்கியிருந்தது. இயக்குநர் பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நடித்து `வர்மா’ என்று பெயரிடப்பட்டு அந்தப் படம் தமிழில் முழுமையாக எடுக்கப்பட்டது. 

கடந்த காதலர் தினத்தன்று வெளியாக இருந்த நிலையில், பாலா படத்தின் முழு படத்தை பார்த்த பட நிறுவனம் `படத்தின் ஃபைனல் வெர்ஷன் எங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. ஒரிஜினலுக்கும் இதற்கும் தொடர்பில்லாமல், இயக்குநர் கதையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறார்.

Advertisement

அதனால் இதை வெளியிட எங்களுக்கு விருப்பமில்லை’ என அறிவித்து அதிர்ச்சியளித்தது. மேலும், துருவ் மீண்டும் கதாநாயகனாக நடிக்க வேறு ஒரு இயக்குனர் மற்றும் கதாநாயகியை வைத்து இந்த படத்தை முதலில் இருந்து தயாரிக்கபோவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தை தற்போது கிரி சாயா என்பவர் இயக்கவுள்ளார். இவர் அர்ஜுன் ரெட்டி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்திற்கு தற்போது ‘ஆதித்யா வர்மா’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தில் துருவ் ஜோடியாக பனிதா சந்து என்பவர்நடிக்கிறார். ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்ய ரதன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Advertisement
Advertisement