எனக்கு இந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை - வெளிப்படையாகப் பேசிய துஷாரா விஜயன்

By subhashini · 1/5/2026

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக துஷாரா விஜயன் வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதிலும் துஷாரா விஜயன்-விக்ரம் நடிப்பில் வெளிவந்த வீர தீர சூரன் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் இன்னொரு பாகம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இதை அடுத்து இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தூஷரா விஜயன் நடித்திருக்கும் வெப் சீரிஸ் எக்ஸாம். இந்த படத்தை புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது.

இந்த படம் மே 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய தூஷரா விஜயன், என்னுடைய சினிமா பயணத்தில் அமேசான் பிரைம் தளம் ரொம்பவே ராசி ஆனது. என்னுடைய முதல் படமான சார்பாட்டா பரம்பரை அறிமுகப்படமான நேரடியாக ஓடிடியில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. இப்போது என்னுடைய வெப் சீரிஸ் அறிமுகமும் அதே தளத்தில் தான் அமைந்திருக்கிறது. இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. இந்த தொடரில் நான் ஜான்சி என்ற போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

தூஷரா விஜயன் திரைப்பயணம்:

இது ஒரு மிகப்பெரிய ரோல். வெளியே பார்க்க கண்டிப்பானவள் ஆகவும் பலமானவளாகவும் தெரிந்தாலும் அவளுக்குள் ஒரு மென்மையான பக்கம் இருக்கிறது. ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கும் போது அந்த அதிகார தோரணை இயல்பாகவே வரவேண்டும். அதே சமயம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி நடிக்க வேண்டும். இந்த சவாலான பாத்திரத்தை இயக்குனர் சற்குணம் மிக அழகாக வடிவமைத்திருக்கிறார். இந்த தொடருக்காக நிறைய ஸ்ன்ட் காட்சிகளில் நடித்துள்ளேன். படப்பிடிப்பின் போது நிறைய அடியும் வாங்கி இருக்கிறேன்.

தூஷரா விஜயன் பேட்டி:

பல இடங்களில் காயங்களும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அந்த வலிகளை தாண்டி ஆக்சன் காட்சிகளை நடிப்பதை நான் ரொம்பவே ரசித்தேன். தினேஷ் மாஸ்டர் ஆக்சன் காட்சிகளை ரொம்ப சிறப்பாக கையாண்டு இருக்கிறார். தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. நான் எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். அதனுடைய ஆரம்பம் தான் ஜான்சி கதாபாத்திரம். வாழ்க்கை என்பது கருப்பு வெள்ளை மட்டும் இல்லை, சாம்பல் நிறமும் கலந்தது தான்.

சினிமா பற்றி சொன்னது:

அந்த மாதிரியான கதாபாத்திரங்களும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். சீரியஸான பாத்திரங்களை செய்பவர் என்ற பிம்பம் இருக்கிறது. ஆனால், ஒரு கலைஞராக நடிப்பிற்கு தீனி போடும் எந்த பாத்திரத்தையும் நான் செய்ய தயார். என்னுடைய வளர்ச்சிக்கு பின்னால் இருப்பது என்னுடைய குடும்பம். நான் ஆறு மாதங்கள் வீட்டில் சும்மா இருந்தாலும் என்னுடைய பெற்றோர் அடுத்த படம் எப்போது என்று கேட்டு என்னை கஷ்டப்படுத்த மாட்டார்கள். அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை ரொம்பவே பெரியது. இன்று எனக்கு ஒரு சினிமா ஒரு பிடித்த இடமாக மாறி இருக்கிறது என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full