மனோபாலா காட்சிகளால் ஏற்பட்ட சர்ச்சை - இந்தியன் 2விற்கு எதிராக இ-சேவை உரிமையாளர்கள்
இந்தியன் 2-க்கு எதிராக இ-சேவை உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இ-சேவை மைய உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து கூட்டம் நடத்தி இருந்தார்கள். இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் தனராஜ், மாவட்ட செயலாளர் ரஞ்சித், நவீன், மாவட்ட பொருளாளர் சுதாகர் உள்பட பல நிர்வாகிகள் கலந்து இருந்தார்கள்.
அப்போது மாவட்ட தலைவர் தனராஜ், தமிழின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்திருந்த 'இந்தியன் 2' படத்தில் நடிகர் மனோபாலா நடித்த ஒரு சில காட்சிகள் வரும். அந்த காட்சிகளில், இ-சேவை மைய ஆப்பரேட்டர்கள் 300 ரூபாய் கொடுத்தால் தான் ஆதார் தொடர்பான சேவைகளை செய்ய முடியும் என்று சொல்லியிருப்பார்கள். இதன் மூலம் இ-சேவை மைய ஆப்பரேட்டர்களை தவறாக சித்தரிக்கும் வகையிலும், இழிவுபடுத்தும் வகையிலும் இயக்குனர் படத்தில் வைத்திருக்கிறார்.
இ-சேவை மைய உறுப்பினர்கள் கண்டனம்:
இதனால் இந்த காட்சியை மட்டும் இந்தியன் 2 படத்திலிருந்து நீக்க வேண்டும். ஆகவே, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கர் படக் குழுவினருக்கும் திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உறுப்பினர்கள் நல சங்க சார்பில் வேண்டுகோள் வைக்கிறோம். இதை அவர்கள் செய்யத் தவறினால் திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நல சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று கூறியிருக்கிறார்கள்.
இந்தியன் 2 படம்:
தற்போது இந்த விவகாரம் தான் இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. இதற்கு இந்தியன் 2 படக்குழுவினர் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் இந்தியன் 2. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியிருக்கிறார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை மீண்டும் இயக்குனர் சங்கர்-கமல் எடுத்திருக்கிறார்கள்.
படம் குறித்த தகவல்:
இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த், ராகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, ஜெகன், பாபி சிம்ஹா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைத்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இந்தியன் படத்துக்கு கிடைத்த வரவேற்பு இந்தியன் 2விற்கு கிடைக்கவில்லை என்றுதான் சொல்லணும்.
மனோபாலா குறித்த தகவல்:
அதோடு சங்கர் திரைப்பயணத்திலேயே இந்த தான் படம் பெரும் தோல்வி என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத பிரபலங்களில் ஒருவர் மனோபாலா. இவர் ஆரம்ப காலத்தில் பாரதிராஜாவிற்கு துணை இயக்குனராக பணியாற்றி இருந்தார். அதற்கு பின் இவரை சிபாரிசு செய்தது உலகநாயகன் கமலஹாசன் தான். இவர் பல்வேறு படங்களை இயக்கி இருந்தார். அதோடு இவர் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி ரோலில் நடித்து இருந்தார். கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் மனோபாலா காலமாகினார்.