எந்திரன் பட விவகாரம்: இயக்குநர் ஷங்கரின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை - பின்னணி என்ன?

By subhashini · 21/2/2025

இயக்குனர் சங்கரின் சொத்துக்கள் முடக்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் சங்கர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அந்த வகையில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த படம் எந்திரன். இந்த படத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் முற்றிலும் மாறுபட்ட ஒரு ரோபோட்டின் வாழ்க்கை குறித்து எடுக்கப்பட்ட கதை. இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் இயந்திரமாகவும், மனிதன் கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்த திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

எந்திரன் படம்:

இதை அடுத்து எந்திரன் 2.0 வெளியாகி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் எந்திரன் பட விவகாரம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, கடந்த 2011 ஆம் ஆண்டு எந்திரன் படத்தினுடைய கதையின் காப்புரிமை குறித்து இயக்குனர் சங்கர் மீது எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் அவர், 'ஜூகிபா'
கதைக்கும் எந்திரன் கதைக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது.

எந்திரன் பட விவகாரம்:

என்னுடைய கதையை திருடி தான் எந்திரன் படத்தை இயக்குனர் சங்கர் எடுத்திருக்கிறார். இது முழுக்க முழுக்க மோசடி செய்து எடுக்கப்பட்டது. இது காப்புரிமை சட்டப்படி கிரிமினல் குற்றம் என்று கூறியிருந்தார்.
இதை அடுத்து இயக்குனர் சங்கரும், தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள். அதில், யாருடைய கதையும் நாங்கள் திருடவில்லை. இது எங்களுடைய கதை தான் என்று கூறியிருக்கிறார்கள்.

View this post on Instagram

A post shared by ABP Nadu (@abpnadu)

விசாரணையில் நடந்தது:

இது அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தது. அதில் ஆரூர் தமிழ்நாடன், ஜூகிபா கதைக்கும் எந்திரன் படத்திற்கும் ஆன 16 ஒற்றுமைகளை பட்டியலிட்டு காட்டி இருந்தார். இதை உறுதி செய்த நீதிபதி இந்த வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கியிருந்தார். அதற்குப்பின் 2011 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் தற்போது இந்த வழக்கினுடைய தகவல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது.

நீதிமன்றம் உத்தரவு:

அதாவது, விசாரணையில் இந்த வழக்கின் அடிப்படையில் சங்கருக்கு சொந்தமான 10.17 கோடி மதிப்பிலான மூன்று அசையா சொத்துக்களை முடக்கப்பட்டு இருக்கிறது.இது தொடர்பான விரிவான தகவல்களை அமலாக்கத்துறை தீவிர விசாரணைக்கு பிறகு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் கோலிவுட் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கடைசியாக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் வெளியாகி இருந்த கேம் சேஞ்சர் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full