100 கோடி மோசடி - அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் சிக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ். இதான் காரணமாம்.

By subhashini · 24/11/2023

பண மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே துணி, நகை கடை என்றால் சினிமா பிரபலங்களை வைத்து விளம்பரம் செய்வது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் திருச்சி கரூர் சாலையில் பிரணவ் ஜூவல்லர்ஸ் என்ற ஒரு நகை கடை செயல்பட்டு வந்தது. இந்த நகை கடையின் கவர்ச்சியாக பிரபலம்படுத்த பிரகாஷ்ராஜ், வாணி போஜன் உட்பட இன்னும் சில பிரபலங்களை வைத்து விளம்பரம் எடுத்திருக்கிறார்கள்.

அதில் 0 சதவீதம் செய்கூலி, சேதாரம் கிடையாது. ஒரு கிராமுக்கு 4000 ரூபாய் சேமிக்கலாம், கல்யாணத்திற்கு தேவையான மொத்த நகையின் மூலம் ₹40,000 சேமிக்கலாம் என்றெல்லாம் பிரகாஷ்ராஜ் சொல்லி இருக்கிறார். இதை நம்பி திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்கள் தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து நகை எடுத்து இருந்தார்கள். இன்னும் சிலர் இந்த ஜுவல்லரியில் நகை சீட்டும் கட்டி வந்திருக்கிறார்கள்.

பிரணவ் ஜுவல்லரி :

500 ரூபாயில் தொடங்கி இலட்சக்கணக்கில் வரை நகை சீட்டுகள் கட்டப்பட்டிருந்தது. அது மட்டும் இல்லாமல் இந்த நகை நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஆறு மாதத்தில் நிறைய லாபம் கிடைக்கும் என்றெல்லாம் ஆசை வார்த்தை சொல்லி கூறியிருக்கிறார்கள். இதனால் மக்களும் நம்பி தங்களிடம் இருந்த பணத்தை முதலீடு செய்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பிரணவ் ஜுவல்லரி முதலாளிகள் மொத்த பணத்தையும் அபேஸ் செய்து தப்பித்து ஒடி இருக்கிறார்கள்.

மோசடி செய்த பிரணவ் ஜுவல்லரி:

இதை அறிந்த பொதுமக்கள் கடையின் முன்பு கண்ணீர் மல்க அழுது போராட்டம் செய்திருக்கிறார்கள். இந்த சம்பவம் தான் திருச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பலரும் பிரகாஷ்ராஜை திட்டி தீர்த்து வருகின்றனர். மேலும், அமலாகத்துறை பிரணவ் ஜுவல்லரியில் சோதனை நடத்திருக்கிறது. அதில் 23.20 லட்சம் பணம் மற்றும் நகைகளை கைப்பற்றி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த நகை குழுமம் செய்த 100 கோடி மோசடியில் பிரகாஷ்ராஜ்க்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரகாஷ்ராஜுக்கு அனுப்பிய நோட்டீஸ்:

இதனை அடுத்து அமலாக்கத்துறை பிரகாஷ்ராஜ் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது. இந்நிலையில் அடுத்த வாரம் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு பிரகாஷ்ராஜ் நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக கொடி கட்டி பறப்பவர் பிரகாஷ்ராஜ். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தொலைக்காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.

பிரகாஷ்ராஜ் திரைப்பயணம்:

இவர் தனது நடிப்பால் குறுகிய நாட்களிலேயே ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார். பெரும்பாலும் பிரகாஷ் ராஜ் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் தான் கலக்கி இருக்கிறார். அதிலும், சமீப காலமாக பிரகாஷ் ராஜ் அவர்கள் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தற்போது இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருக்கிறார். இப்படி இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வந்தாலும் அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full