தமிழகத்தை தற்போது ஆளும் ஓபிஎஸ்-இபிஎஸ் அரசாங்கத்தின் மீது மக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு இருந்து வருகிறது. தொடர்ச்சியாக அரைபெடல் அடிப்பது போல ஆட்சி ஓடிக்கொண்டிருக்கிறது.

Advertisement

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பேருந்து கட்டணம் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, அரசு விழா என பல நூறு கோடிகளை அனாவசிய செலவு செய்துவிட்டு கடைசியாக அரசின் கஜானா காலி ஆன உடன் அடித்தட்டு மக்களின் பர்ஸில் கை வைத்துள்ளது இந்த அரசு.

இதனால் தமிழகம் முழுவதும் 3வது நாளாக போராட்டங்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் மூலம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கூவிய ஜூலி, இங்கும் வந்து போராட்டம் செய்ய திட்டமிட்டுள்ளது போல ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

Advertisement

Advertisement

பேருந்துகள் மக்களின் சொத்து. கட்டண உயர்வை மக்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்கிறது ஆளும் அரசு. மக்கள் தேர்ந்தெடுத்த கட்சியின் அரசுதான் இது. இந்தக் கட்சியும் அதன் ஆட்சியும் வேண்டாம் என்று மக்களே சொல்கிறார்கள். அதிகாரத்தில் இருந்து விலகுவார்களா? என பதிவு செய்துள்ளார்

Advertisement