அடேங்கப்பா, ஈரமான ரோஜாவே 2 சீரியல் பிரியா இத்தனை படங்களில் நடித்துள்ளாரா?

By Rajkumar · 5/3/2023

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் பிரியா ரோலில் நடிக்கும் சுவாதி படங்களில் நடித்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியல் 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த தொடரில் மலராக பவித்ரா நடித்திருந்தார். வெற்றியாக புதுமுக நடிகர் திரவியம் நடித்திருந்தார். இவர்களுடன் சியாம், சாய் காயத்ரி, பிரேமலதா, பிரவீன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த தொடர் முடிவுக்கு வந்த பிறகு வித்தியாசமான கதைக்களத்துடன் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் திரவியம், சித்தார்த், கேப்ரில்லா, ஸ்வாதி கொண்டே என பல நடிகர்கள் நடிக்கிறர்கள்.

ஈரமான ரோஜாவே 2 சீரியல்:

இந்த தொடர் ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சீரியலில் பார்த்தி, ஜீவா இருவரும் அண்ணன், தம்பி. அதேபோல் பிரியா, காவ்யா இருவரும் அக்கா, தங்கை. இதில் காவ்யா-ஜீவா இருவரும் காதலித்து இருந்தார்கள். ஆனால், விதி செய்த வலியால் பார்த்தி- காவியாவையும், ஜீவா-ப்ரியாவையும் செய்த செய்து கொள்கிறார்கள். சீரியலில் ஜோடி மாறி திருமணம் ஆன பிறகு பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

சீரியலின் கதை:

விபத்து போல நடந்து முடிந்த கல்யாணத்தில் பிரியாவும், ஜீவாவும் நெருக்கமாக பழக தொடங்கி விட்டார்கள். ஆனால், பார்த்தி- காவியா விஷயத்தில் மட்டும் பிரச்சனைகள் முற்றிக் கொண்டே செல்கிறது. தற்போது சீரியலில் பார்த்திபன் - காவியா இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்து இருக்கிறார்கள். பின் பார்த்திபனுக்கு வேறொரு திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார்கள். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற பல எதிர்பார்ப்புடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

சுவாதி பூர்விகம்:

இந்த நிலையில் சீரியலில் ப்ரியா கதாபாத்திரத்தில் நடிக்கும் சுவாதி குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழில் ஈரமான ரோஜாவே 2 சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சுவாதி இவர் கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர். கன்னட மொழி படத்தின் மூலம் தான் இவர் சினிமா துறைக்குள் நுழைந்திருந்தார். இதுவரை இவர் கிட்டத்தட்ட நான் கன்னட படத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் கன்னட சீரியலிலும் நடித்து இருக்கிறார்.

சுவாதி குறித்த தகவல்:

தமிழில் ஈரமான ரோஜாவே 2 என்ற தொடரில் ஜீவா- பிரியா உடைய காம்பினேஷன் வேற லெவலில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இவர் இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். மேலும், இவர் நடிப்பதை தாண்டி நடனத்தின் மீது அதிக ஆர்வம் உடையவர். மேலும், இவருக்கு பெயிண்டிங் மீது தீராத காதல் உடையவர். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் மனதிற்கு பிடித்தவற்றை பெயிண்டிங் செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு எல்லா மொழி படங்களிலும் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை என்று கூட சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full