ஈரமானே சீரியல் பிரபலம் சொன்ன குட் நியூஸ் - Cute புகைப்படங்களுடன் அவரே சொன்ன செய்தி.

By Arun · 13/10/2022

ஈரமான ரோஜாவே சீரியல் நடிகர் தீபக் அப்பாவாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் தீபக் - அபிநவ்யா. இவர்கள் இருவரும் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த திருமணம் என்ற சீரியலில் நடித்து இருந்தார்கள். இந்த சீரியல் இவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல ரீச்சை கொடுத்தது.

பின் இவர்கள் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த என்றென்றும் புன்னகை என்ற சீரியலில் நடித்து இருந்தார்கள். இந்த சீரியலின் மூலம் தான் தீபக் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. அதற்கு பின் தீபக் சித்திரம் பேசுதடி சீரியலில் நடித்து இருந்தார். அதேபோல் அபிநவ்யா அவர்கள் சித்திரம் பேசுதடி, கண்மணி, பிரியமானவள், சிவா மனசுல சக்தி போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கிறார்.

அபிநவ்யா-தீபக் திருமணம்:

இதனிடையே இவர்கள் இருவரும் ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்தார்கள். பின் இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அபி நவ்யா மற்றும் தீபக் இருவருக்கும் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பின் சென்னையில் இருக்கும் ஒரு திருமண ஹாலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமண புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைராலகி இருந்தது.

ஈரமான ரோஜாவே 2 சீரியல்:

தற்போது தீபக் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் திரவியம், சித்தார்த், கேப்ரில்லா, ஸ்வாதி கொண்டே என பல நடிகர்கள் நடிக்கிறர்கள். இந்த தொடர் ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சீரியலில் பார்த்தி, ஜீவா இருவரும் அண்ணன், தம்பி. அதேபோல் பிரியா, காவ்யா இருவரும் அக்கா, தங்கை.

அபிநவ்யா-தீபக் நடிக்கும் சீரியல்:

இதில் காவ்யா-ஜீவா இருவரும் காதலித்து இருந்தார்கள். ஆனால், விதி செய்த வலியால் பார்த்தி- காவியாவையும், ஜீவா-ப்ரியாவையும் திருமணம் செய்து கொள்கிறார்கள். சீரியலில் ஜோடி மாறி திருமணம் ஆன பிறகு பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அபிநவ்யா-தீபக் இருவரும் மகிழ்ச்சியான செய்தியை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள். அதாவது, அபிநவ்யா கர்ப்பமாக இருக்கிறார்.

அபிநவ்யா-தீபக் பதிவு:

பதிவில் அவர்கள், எங்கள் குடும்பத்தில் புதியவர் வளர்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு உங்களின் எல்லோருடைய ஆசீர்வாதமும் தேவை. இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி என்று கூறி இருக்கின்றனர். இப்படி இவர்கள் பதிவிட்ட பதிவு சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் அபிநவ்யா மற்றும் தீபக்கிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full