ஈரமான ரோஜாவே தொடரின் முக்கிய நபர் திடீர் மரணம் - இனி சீரியலின் நிலை என்ன ?

By Arun · 15/12/2022

ஈரமான ரோஜாவே 2 சீரியலின் இயக்குனர் திடீர் மரணம் அடைந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீப காலமாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடர்கள் எல்லாம் இவ்வளவு ஹிட்டாகுவதற்கு காரணம் அந்த சீரியலுடைய இயக்குனர்கள் தான்.

இந்நிலையில் விஜய் டிவி சீரியல் இயக்குனர் தாய் செல்வம் என்பவர் திடீர் மரணம் அடைந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த காத்து கருப்பு, தாயுமானவன், கல்யாண முதல் காதல் வரை, மௌன ராகம் சீசன் 1, நாமிருவர் நமக்கிருவர், பாவம் கணேசன் போன்ற பல சூப்பர் ஹிட் தொடர்களை இயக்கியிருக்கிறார். இவர் சின்ன திரையில் மட்டும் இல்லாமல் வெள்ளி திரையில் கூட எஸ் ஜே சூர்யா நடித்து வெளிவந்த நியூட்டனின் மூன்றாம் விதி படத்தையும் இயக்கி இருந்தார்.

ஈரமான ரோஜாவே 2:

தற்போது இவர் விஜய் டிவியில் டிஆர்பி யில் முன்னிலையில் வகுத்து வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலை இயக்கி வருகிறார். ஈரமான ரோஜாவே முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஈரமான ரோஜாவே 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் இரண்டாம் பாகத்தில் திரவியம், சித்தார்த், கேப்ரில்லா, ஸ்வாதி என பல நடிகர்கள் நடிக்கிறர்கள். இந்த தொடர் ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

https://twitter.com/vijaytelevision/status/1603245335291187201

சீரியல் குறித்த தகவல்:

சீரியலில் பார்த்தி, ஜீவா இருவரும் அண்ணன், தம்பி. அதேபோல் பிரியா, காவ்யா இருவரும் அக்கா, தங்கை. இதில் காவ்யா-ஜீவா இருவரும் காதலித்து இருந்தார்கள். ஆனால், விதி செய்த சதியால் பார்த்தி- காவியாவையும், ஜீவா-ப்ரியாவையும் திருமணம் செய்து கொள்கிறார்கள். சீரியலில் ஜோடி மாறி திருமணம் ஆன பிறகு பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது. தற்போது சீரியலில் காவியா வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

சீரியலின் கதை:

ஆனால், காவியாவை யாரும் தடுக்கவில்லை. பார்த்தியின் அம்மாவும் காவியா செல்வதை நினைத்து சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம், காவியா எந்த தவறும் செய்யவில்லை என்ற உண்மை தெரிந்தவுடன் பார்த்திபன் காவியாவை வீட்டிற்கு கூட்டிட்டு வர போராடுகிறார். காவியாவும் மனம் மாரி பார்த்திபனுடன் வீட்டிற்கு வர நினைக்கிறார். இதை அறிந்த பார்த்திபனின் அம்மா காவியன் மீது பயங்கரமாக கோபப்படுகிறார். பார்த்தி-காவியா சேர்ந்து வாழ்வார்களா? பிரியா, ஜீவாவை மன்னிப்பாரா? போன்ற பல திருப்பங்களுடன் சீரியஸ் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கின்றது.

தாய் செல்வம் மரணம்:

இந்த நிலையில் இந்த சீரியலின் இயக்குனர் தாய்ச்செல்வம் திடீர் மரணம் அடைந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவரின் மரணம் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவருடைய மறைவிற்கு ரசிகர்களும், திரை பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இவருடைய மறைவிற்கு பிறகு ஈரமான ரோஜாவே 2 சீரியலின் நிலைமை என்ன ஆகும்? என்று தெரியவில்லை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full