ஈஸ்வரன் ஆடியோ லாஞ்சில் நாயகியிடன் சுசீந்திரன் செய்த செயல் - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.

By Rajkumar · 4/1/2021

தென்னிந்திய சினிமா திரை உலகில் சர்ச்சை நாயகன் என்றால் அது 'லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு' தான். . இருப்பினும் சினிமாத்துறையில் அவரை குறித்து பல விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தன. எப்படியிருந்தாலும் சிம்புவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டுதான் வருகிறது.நடுவில் சில தோல்வி படங்கள் வந்த நிலையிலும் ரசிகர்கள் அவரை கை கொடுத்து தூக்கி விட்டனர்.செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினர். இந்த படங்களை தொடர்ந்து சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைப்பததற்கு வெளிநாடு சென்று தீவிர கவனம் செலுத்தி வந்த சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார்.

https://twitter.com/mrkollywood/status/1345710504698806273

இதனிடையே சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு 'ஈஸ்வரன்' படத்தில் நடித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது. ஆனால், அதற்குள்ளாகவே இந்த படத்தின் படப்பிடிப்பே நிறைவடைந்துவிட்டது. கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகி வரும் இந்த படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால், பாலா சரவணன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதையும் பாருங்க : மூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவி குடும்ப பெண்ணாக நடித்த நடிகையா இப்படி ஒரு கிளாமர் உடையில்.

தமன் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட் செய்கிறார். ஜீரோ' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' ஆகிய படங்களைத் தயாரித்த மாதவ் மீடியாவின் 5-வதாக தயாரிப்பாக‘ஈஸ்வரன்’ படம் உருவாகியுள்ளது.  திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கிய ‘ஈஸ்வரன்’ படப்பிடிப்பு 40 நாட்களில் நிறைவடைந்தது. இந்த படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

https://twitter.com/MartinZith007/status/1345585262773084168

இந்த படத்தின் இசை வேலியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் நாயகி நிதி அகர்வால் பேசும் போது அவரது அருகில் வந்து நின்ற இயக்குனர் சுசீந்திரன் சிம்பு மாமா ஐ லவ் யூனு சொல்லு என்று அவரை நிர்பந்தித்து கொண்டே இருந்தார். இதனால் நிதி அகர்வால் சங்கடத்திற்கு உள்ளனர். இத்தோடு நிற்காமல், நிதி அகர்வாலுடன் பெல்லி டான்ஸ் அடலாமா என்றும் கேட்டார் சுசீந்திரன். அதற்கு நிதி அகர்வால் சிம்புவை போல விரலில் சைகை செய்து முத்தமிட்டார்.

ஆனால், அப்போதும் விடாத சுசீந்திரன் நடனம் ஆடவில்லை என்றால் அடுத்த படத்தில் செலக்ட் பண்ண மாட்டேன் என்றார். சுசீந்த்ரினின் இந்த செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர். நடிகை நிதி அகர்வால் ஏற்கனவே ஜெயம் ரவியின் பூமி படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் ஜனவரி 14 ஆம் தேதி ஹாட் ஸ்டாரில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full