கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ள படம் “எனை நோக்கி பாயும் தோட்டா”. வட சென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்களுக்குப் பிறகு தனுஷ் அவர்கள் இந்த படத்தில் இளமையான தோற்றத்தில் நடித்து உள்ளார். மேலும், இந்த படம் இயக்குனர் கௌதம் மேனன்– தனுஷ் கூட்டணியில் வெளியாகி உள்ள முதல் படமாகும். பொதுவாகவே கௌதம் மேனன் படம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது ஒன்று தான் காதல்,ரொமான்டிக். மேலும்,இந்த படத்தில் ரொமான்டிக் காட்சிகளுக்கு பஞ்சமில்லை. மேலும்,இந்த படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசி குமார், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். அதோடு இளம் நடிகை மேகா ஆகாஷ் முதன் முறையாக தனுஷுடன் இணைந்து நடித்துள்ள படமாகும். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்து உள்ளார்கள். மேலும், தர்புகா சிவா அவர்கள் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்கள். அதோடு இத்தனை வருட காத்திருப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் திரையரங்குகளில் இப்படம் ரிலிஸாகி உள்ளது.

கதைக்களம்:

Advertisement

படத்தின் ஆரம்பத்திலேயே ரவுடி கும்பல் ஒன்று தனுஷை கடத்திக் கொண்டு செல்கிறார்கள். அவர்கள் யார்? என்ன? என தெரியவில்லை. பின் அவர்கள் தனுஷிடம் உன்னுடைய அண்ணனை இங்கே வரச் சொன்னால் தான் உன்னை விடுவிப்போம் என்று சொல்கிறார்கள். மேலும், முதல் பாகத்தில் தனுஷ் அண்ணன் யார்? என்று காண்பிப்பது இல்லை. மேலும்,அந்த ரவுடி கும்பல் தனுஷ் அண்ணன் வந்த உடனே இரண்டு பேரையும் தீத்து கட்ட திட்டம் தீட்டினார்கள். பின் தனுஷ் அவர்கள் எல்லாரையும் அடித்து போட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் செல்கிறார். பின் தனுஷ் பிளாஷ் பேக்கு காண்பிக்கிறார்கள். தனுஷின் அண்ணனாக சசிகுமார் நடித்து உள்ளார். பின் சசிகுமாரும், ஒரு பெண்ணும் சின்சியராக காதலித்து வருகிறார்கள். ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை திடீரென்று அந்த பெண்ணை விட்டுட்டு சசிகுமார் சென்று விடுகிறார்.

இதையும் பாருங்க : மேலாடை விலகியது கூட தெரியாமல் புகைப்படத்தை பதிவிட்ட அதுல்யா. ஷாக்கான ரசிகர்கள்.

தனுஷ் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். அப்போது தான் கதாநாயகி மேகா ஆகாஷ் என்ட்ரி கொடுக்கிறார். மேலும்,மேகா ஆகாஷ்க்கு அப்பா, அம்மா யாரும் கிடையாது. அவருடைய கார்டியன் ஒருத்தர் தான் பார்த்துக் கொண்டு வருகிறார். மேலும்,தனுஷும்,மேகா ஆகாஸூம் முதலில் நல்ல நண்பர்களாக பழகி வருகிறார்கள். திடீர் என்று அவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. மேகா ஆகாஷ் படத்தில் நடிக்க விருப்பமில்லை. ஆனால், தனுஷும்,மேகா ஆகாஷ் கார்டியனும் தான் ஒரு படத்தில் மட்டும் நடி என்று நடிக்க வைக்கிறார்கள். பின் மேகா ஆகாஸுக்கு ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வருகிறது. ஆனால், இவர் நடிக்க முடியாது என்று மறுக்கிறார்.

Advertisement

மேலும், அந்த கார்டியன் இவரிடம் தப்பாக நடக்க முயற்சி செய்கிறார். உடனே அவர் தனுஷுடன் சொல்கிறார். இதற்கு பிறகு இவர்களுக்கு இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. சில ஆண்டுகள்மேகா ஆகாஷ் இடம் இருந்து ஒரு நாள் தனுஷுக்கு போன் கால் வருகிறது. பின் உன் அண்ணன் மும்பையில் தான் இருக்கிறார். மேலும், அவர் போலீசாக இருக்கிறார் என்று கூறுகிறார். அப்போது தான் படத்தின் இரண்டாம் காட்சி தொடங்குகிறது. மேலும்,ஏன் அந்த ரவுடி கும்பல் தனுஷ் அண்ணனை கொல்ல முயற்சி செய்கிறது, அதற்கு நடுவில் எப்படி தனுஷ் மாட்டினார், இந்நிலையில் தனுஷ் தன் அண்ணனையும், தன்னுடைய காதலியையும் காப்பாற்றினாரா?? என்பது தான் படத்தின் மீதி கதை.

Advertisement

பிளஸ்:

கௌதம் மேனன் படம் என்றாலே ரொமான்டிக் தான். மேலும், படத்தின் ரொமாண்டிக் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லை என்று சொல்லலாம்.

மேலும், படத்தின் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. அதோடு ‘மறு வார்த்தை பேசாதே’ பாடல் வேற லெவல்ல உள்ளது.

மேலும்,அதிரடி,ரொமாண்டிக், படமாக அமைந்து உள்ளது.

மைனஸ்:

மூன்று ஆண்டுகளாக படம் வெளியிடுவதில் சில பிரச்சனைகள் இருந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும்,இத்தனை வருடங்களாக பல எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு இந்த படம் எதிர்பார்த்த எதிர்பார்ப்பை கொடுக்கவில்லை.

பாகவர் படத்தில் எப்படி பாடல்கள் அதிகமாக இருக்குமோ, அதே மாதிரி முதல் காட்சியிலேயே ஆறு பாடல்கள் கொண்டு வந்து உள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் படத்தில் முத்தக் காட்சிகள், ரொமான்டிக் சீன்கள் பார்ப்பதற்கு நல்லா இருக்கும். ஆனால், இந்த படத்தில் கொஞ்சம் ஓவராக உள்ளது என்றும் கூறுகிறார்கள்.

மேலும், கௌதம் மேனன் ரொமான்டிக் படம் என்றால் ரசிகர்கள் குஷி ஆகிவிடுவார்கள். ஆனால், அதெல்லாம் வேணாம் என்று கோஷம் போடும் அளவிற்கு இந்த படம் உள்ளது.

படம் அலசல்:

ஒரு சில படங்களில் மூன்று, நான்கு கதாபாத்திரங்களை வைத்து கதையை கொண்டு சென்றுள்ளார்கள். அதே போல தான் இந்த படத்தையும் எடுத்து உள்ளார்கள் ஆனால்,சொல்லி கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை. கௌதம் மேனன் படம் என்றாலே இருக்கும் எதிர்பார்ப்பை இந்த படம் முழுவதும் முறியடித்துவிட்டது என்றும் கூறிவருகிறார்கள். மொத்தத்தில் “என்னை நோக்கி பாயும் தோட்டா– தன்னுடைய இலக்கை தவறி பாய்ந்து உள்ளது”.

Advertisement