எனக்கு கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகிடிச்சி - இளசுகள் நெஞ்சில் இடியை இறங்கிய Tum Tum Tum பாடல் Tattoo டான்சர்

By subhashini · 3/12/2021

இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் எனிமி. இந்த படத்தை எஸ். வினோத் குமார் தயாரித்திருந்தார். இந்த படத்தில் விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. மேலும், படத்தின் கதையை விட இந்த படத்தின் டம் டம் பாடல் தான் பயங்கர ட்ரெண்டிங் ஆனது. இந்த படத்தில் விசேஷம் சமயத்தில் டம் டம் என்ற பாடல் வரும். இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதினார்.

இந்த பாடலை ஸ்ரீவர்த்தினி, அதிதி, சத்யா யாமினி, ரோஷினி, தேஜஸ்வினி ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. மேலும், இந்த பாடலில் நாயகி மிருணாளினி நடனம் ஆடி இருந்தார். இவருக்குப் பின் பலபேர் நடனமாடி இருந்தார்கள். அதில் பின்னணியில் டாட்டூ போட்டு நடனம் ஆடிய டான்ஸர் ஒருவர் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார். அந்த நடனம் ஆடிய டான்சரின் இடுப்பில் டாட்டூ தெரியும்.

கதாநாயகியை விட பின்னாடி நடனம் ஆடிய டான்சரின் டாட்டூ தான் பலரையும் ஈர்த்தது. இந்நிலையில் ரசிகர்கள் இதை மீம்ஸ் போட்டு ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர். அதோடு ரசிகர்கள் கூகுள் முழுவதும் இவரை குறித்து தான் தேடினார்கள். மேலும், இவருடைய பெயர் சந்திரா ஜோஷி. இப்படி ஒரு நிலையில் இவரை பிரபல சேனல் பேட்டி ஒன்று எடுத்து இருக்கிறது. அதில் அவர் கூறியிருப்பது, டம் டம் பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அதிலும் ரசிகர்கள் என்னை வைத்து மீம்ஸ் போட்டு சோசியல் மீடியாவில் வைரலாகியதை நான் நினைத்து கூட பார்க்கவில்லை. ரொம்ப சந்தோஷமாகவும் இருக்கிறது.

எனக்கு 19 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. எனக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகிறது. நான் எப்போதும் எனக்கு பிடித்ததை தான் செய்வேன். நடனம் கற்றுக் கொள்வதற்காகவே நான் என்னுடைய கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டேன். எனக்கு நடனம் என்றால் பிரியம். நடனத்திற்காக என்னுடைய வளர்ச்சியை தடுக்கும் எதுவாக இருந்தாலும் நான் விட்டு விடுவேன். தமிழில் இன்னொரு படத்தில் ஆடியிருக்கிறேன். அதிலும் என்னை காணலாம் என்று கூறி இருக்கிறார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full