குப்பத்து ராஜா படத்தின் "எங்க ஏரியா எங்களுது" சரவெடி பாடல்..! வீடியோ உள்ளே!

By Ajju · 13/6/2018
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி வி பிரகாஷ் ஹீரோவாக களமிறங்கிய பிறகு பல ஹிட் படங்களை கொடுத்துளளார். இக்கால இளைஞர்களை கவரும்படியான கதாபாத்திரத்தில் தேர்தெடுத்து நடித்து வரும் ஜி வி தற்போது 'குப்பத்து ராஜா' என்ற படத்தில் நடித்துளளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல் ஒன்று யூடூயூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. [embed]https://youtu.be/JXfW0pYz-sI[/embed] நடன இயக்குனர் ஆர்.எஸ்.பாஸ்கர் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பார்த்திபன் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக நடிகை பூனம் பாஜ்வா நடித்துள்ளார். இந்தப் படத்தை எஸ் ஃபோக்கஸ் (S Focus) என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. படத்தில் டீசர் வெளியாகி 6 மாதம் ஆன நிலையில் இன்னும் இந்த படம் வெளியான பாடில்லை. இந்நிலையில் சமீபத்தில் தற்போது இந்த படத்தின் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. 'எங்க ஏரியா எங்க கெத்து ' என்ற குத்து பாடல் தற்போது யூடுயுப் வலைதளத்தில் வெளியாகியுள்ளது. சென்னையில் சேரி பகுதி ஒன்றில் நடக்கும் ஒரு கதையாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், தற்போது இம்மாதம் இந்த படம் திரைக்கு வர தயாராக உள்ளது. இதன் முன்னோட்டமாகவே இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு பாடலை மட்டும் படக்குழு வெளியிட்டுள்ளது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full