கதைக்கு தேவைபட்டால் அப்படி நடிக்கவும் தயார்.! எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி கொடுத்த ஷாக்.!

By Rajkumar · 22/2/2019

கடந்த ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை ‘ நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது. நடிகர் ஆர்யாவிற்கு பெண் தேடும் நிகழ்ச்சியாக தொடங்கிய நிகழ்ச்சியில், பல இளம் பெண்கள் பங்குபெற்றனர். அதில் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் அகர்பத்தி என்று செல்ல பெயரை பெற்ற அபர்ணதி. 

20 வயதாகும் அபர்ணதி எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார். அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற சக போட்டியாளர்கள் அனைவரிடமும் வாயாடி என்று பெயர் பெற்றார். தற்போது ஜி வி பிரகாஷிக்கு ஜோடியாக ‘ஜெயில்’ படத்தில் நடித்து வருகிறார்.

வசந்த பாலன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதமாக நடந்து வருகிறது. ஆனால், நீண்ட நாட்களாக படத்தின் எந்த தகவலும் வெளியாகாமல் இருக்கிறது. இந்த படத்தில் அவர் லேடி தாதாவாக நடிக்கிறாராம். யாருக்கும் பயப்படாத, ஆண்களை புரட்டி எடுக்கும் தைரியமான பெண் கதாபாத்திரம்.

மேலும், இந்த படத்தில் பெரும்பாலான காட்சியில் நைட்டியிலும் மற்றும் சுடிதாரிலும் தான் நடித்துள்ளாராம் அபர்ணதி. மேலும், சினிமாவில் நிலைத்து நிற்க வில்லி கதாபாத்திரத்திலும் கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாகவும் நடிக்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார். ஜெயில் படத்திலேயே இவர் ஜி வி பிரகாஷுடன் லிப் லாக் காட்சியில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full